Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைனில் ரூ.300 தரிசன சீட்டு

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைனில் ரூ.300 தரிசன சீட்டு

By: Nagaraj Wed, 01 July 2020 1:57:40 PM

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைனில் ரூ.300 தரிசன சீட்டு

ஒதுக்கீடு அடிப்படையில் தரிசன சீட்டு... திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒதுக்கீடு அடிப்படையில் ரூ.300 தரிசன சீட்டு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பதியில் இந்த மாதத்துக்கு ஒடுக்கீடு அடிப்படையில் ரூ.300 தரிசன சீட்டு தினமும் 9 ஆயிரம் வழங்கப்பட உள்ளன. அதற்காக நேற்று ரூ.300 தரிசன சீட்டு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் எட்டாம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 300 ரூபாய் சிறப்பு தரிசன சீட்டு தினமும் 6 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 9 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

tirupati,devasthanam,darshanam,devotees,announcement ,திருப்பதி, தேவஸ்தானம், தரிசன சீட்டு, பக்தர்கள், அறிவிப்பு

அதேபோல் நாளொன்றுக்கு 1000 விஐபி தரிசன சீட்டுகள் வரை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஜூலை மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன ஆன்லைன் சீட்டு தேவஸ்தனம் நேற்று வெளியிட்டுள்ளது.

அதேபோல் இன்று (ஜூலை 1ஆம் தேதி) இலவச தரிசனம் செய்வதற்கான அனுமதி சீட்டு இன்று முதல் திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், அலிபிரி, விஷ்ணு நிவாசம் ஆகிய இடங்களில் வழங்கப்படுகிறது என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு தினமும் 3 ஆயிரம் டைம் ஸ்லாட் டோக்கன்கள் திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், சீனிவாசம், மாதவம் ஆகிய விடுதிகளிலும், அலிபிரியில் உள்ள ஸ்ரீதேவி காம்ப்ளக்சிலும் வழங்கப்பட உள்ளன. அதில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் ஒருநாள் முன்கூட்டியே வந்து டைம் ஸ்லாட் டோக்கனை பெற வேண்டும். இந்தத் தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :