Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • தண்ணீரில் எலுமிச்சை பழம் போட்டு வைப்பதால் ஏற்படும் நன்மைகள்

தண்ணீரில் எலுமிச்சை பழம் போட்டு வைப்பதால் ஏற்படும் நன்மைகள்

By: Nagaraj Sat, 31 Oct 2020 12:38:36 PM

தண்ணீரில் எலுமிச்சை பழம் போட்டு வைப்பதால் ஏற்படும் நன்மைகள்

தண்ணீரில் எலுமிச்சை பழம் போட்டு வைப்பதால் ஏற்படும் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நாம் பல கடைகளில், வீடுகளில், பணியிடங்களில் ஒரு டம்ளர் நீரினுள் எலுமிச்சை இட்டு வைத்திருப்பதை கண்டிருப்போம். இது எதனால்? என்ற கேள்வி இயல்பாகவே நம் அனைவருக்கும் எழும். எலும்பிச்சை என்பது வெறும் பழம் என்பது மட்டுமல்ல அதற்கென பிரத்யேக ஆன்மீக மற்றும் மருத்துவ குணங்கள் உண்டு.

குறிப்பாக, எலுமிச்சையில் பொட்டாசியம், கேல்சியம், பாஸ்பரஸ், மற்றும் மெக்னீஸியம் சத்துகள் அடங்கியுள்ளன. எனவே தண்ணீரில் எலுமிச்சை கலந்து எடுத்து கொள்வது முழுமையான ஆரோக்யத்திற்கும், எதிர்ப்பு சத்திற்கும் உகந்ததாக அமையும்.

lemon,water,good vibes,soothing ,எலுமிச்சை, தண்ணீர், நல்ல அதிர்வுகள், சௌபாக்கியம்

ஆன்மீக ரீதியாக பார்த்தால் எலுமிச்சைக்கு எதையும் நேர்மறையான ஆற்றலாக மாற்றும் தன்மை உண்டு. ஒருவர் தீய எண்ணத்துடன் நம்மை அணுகினாலும் கூட ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை இருப்பதை பார்த்தால் உளவியல் ரீதியாக சற்று திகைப்படைவார். அந்த திகைப்பே அவருடைய தீவிரத்தை குறைத்து விடும்.

மற்றொன்று தண்ணீருக்கு ஞாபக சக்தி உண்டு என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன . தண்ணீருக்கு தன்னை சுற்றியுள்ள ஆற்றலுக்கு தகுந்த வாறு மாறும் தன்மை உண்டு. இதற்கு பல உதாரணங்கள் உண்டு கடவுளின் பெயர் சொல்லி ஹோமம் நிகழ்த்தும் போது கலச தீர்த்தமாகவும், அர்ச்சனையின் போது தீர்த்தமாகவும், ஏன் சில சமயம் சாதுக்கள் பிறரை வாழ்த்தவோ அல்லது சபிக்கவோ வேண்டும் என்றால் கூட தண்ணீரை பயன்படுத்துவதை நாம் பார்த்திருக்கிறோம்.

நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல் இரண்டிற்குமே தகுந்தவாறு மாறும் தன்மை உடைய நீரை நமக்கு ஏதுவான நேர்மறை ஆற்றலின் பால் ஈர்க்க வேண்டுமெனில், அங்கு எலுமிச்சையை பயன்படுத்துவதே சிறப்பானது. எலுமிச்சையை நீரில் இடும் போது, அதன் இயல்பான தன்மையினால் அது அந்த இடத்தை சுற்றியுள்ள தீமைகளை போக்குகிறது.

வீடுகள், அலுவலகங்கள், பணியிடங்கள் போன்ற இடங்களில் ஒரு கண்ணாடி டம்ளரில் எலுமிச்சையை இட்டு வைப்பது நல்லது. இவ்வாறு செய்கிற போது அதிலிருந்து பெருகும் ஆற்றல் அந்த இடத்தை முற்றிலுமாக தீய அதிர்வுகளிடமிருந்து சுத்திகரிக்கிறது. மேலும் அந்த இடத்திற்கு தேவையான நல்லதிர்வுகளை ஈர்த்து பல நல்ல செளபாக்கியங்களை பெற்று தருகிறது.

Tags :
|
|