Advertisement

திருப்பதியில் 5 டன் எடை மலர்களை கொண்டு அலங்காரம்

By: Nagaraj Sat, 19 Sept 2020 5:39:32 PM

திருப்பதியில் 5 டன் எடை மலர்களை கொண்டு அலங்காரம்

புரட்டாசி மாதம் துவங்கினாலே பெருமாள் கோவில்கள் களைக்கட்ட ஆரம்பித்து விடும். அந்த வகையில் பிரமோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் வளாகம், சுமார் 5 டன் எடையிலான மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவம் தொடங்குவதை ஒட்டி நேற்று அங்குரார்ப்பணம் பூஜை நடைபெற்றது. இதையொட்டி, விஷ்வ சேனாதிபதி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ரங்கநாதர் மண்டபத்தில் எழுந்தருளினார்.

tirupati,perumal temple,worship,flagging,pramorsavam ,திருப்பதி, பெருமாள் கோவில், வழிபாடு, கொடியேற்றம், பிரமோற்சவம்

பின்னர், புற்று மண்ணில் நவதானியங்கள் விதைக்கப்பட்டு, 9 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்காக கோயில் கருவூலத்தில் வைக்கப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு கொடி ஏற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்க உள்ள நிலையில், திருமலை முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தாலும் வழிகாட்டுதல் பிரகாரம் தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

Tags :