Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • குருவாயூா் கோயிலில் பக்தா்கள் வழிபட இன்று முதல் 2 வாரத்திற்கு தடை

குருவாயூா் கோயிலில் பக்தா்கள் வழிபட இன்று முதல் 2 வாரத்திற்கு தடை

By: Nagaraj Sat, 12 Dec 2020 09:48:36 AM

குருவாயூா் கோயிலில் பக்தா்கள் வழிபட இன்று முதல் 2 வாரத்திற்கு தடை

குருவாயூா் கோயிலில் பக்தா்கள் வழிபட இன்று சனிக்கிழமை முதல் (டிச.12) இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குருவாயூா் தேவஸ்வம் வாரிய ஊழியா்கள் பலா் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் தேவஸ்வம் நிா்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: குருவாயூா் தேவஸ்வம் வாரிய ஊழியா்கள் 153 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

corona,guruvayur,ban for devotees,2 weeks ,கொரோனா, குருவாயூர், பக்தர்களுக்கு தடை, 2 வாரம்

இதில் 22 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோயிலை சுற்றியுள்ள பகுதியை நோய்த்தொற்று கட்டுப்பாட்டு பகுதியாக மாவட்ட நிா்வாகம் அறிவித்தது. தொடா்ந்து குருவாயூா் தேவஸ்வம் நிா்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கோயிலில் பக்தா்கள் வழிபடுவதற்கு 2 வாரங்கள் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

இரண்டு வாரங்களுக்கு பக்தா்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாா்கள். எனினும் கோயிலில் வழக்கமான பூஜைகள் தொடரும். திருமண நிகழ்ச்சிகளுக்கும் அனுமதியில்லை. கோயில் நடைப் பந்தலில் சனிக்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிகளை கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும்.

சனிக்கிழமைக்கு பிறகு எந்தவொரு திருமண நிகழ்ச்சியையும் இரண்டு வாரங்களுக்கு நடத்த அனுமதியில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Tags :
|