Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • மார்கழி மாதத்தில் முன்னோர் வழிபாடு நடத்துவது நமது கடமை

மார்கழி மாதத்தில் முன்னோர் வழிபாடு நடத்துவது நமது கடமை

By: Nagaraj Wed, 16 Dec 2020 10:06:02 AM

மார்கழி மாதத்தில் முன்னோர் வழிபாடு நடத்துவது நமது கடமை

முன்னோர் வழிபாடு நமது கடமை... மார்கழி மாதம் தனுர் மாதம். மாதங்களில் நான் மார்கழி என்கிறார் விஷ்ணு பகவான். இந்த மார்கழி மாதத்தில் தர்ப்பணம் செய்வதும், முன்னோர் வழிபாடு செய்வதும் நம்முடைய கடமை. இதனை முறைப்படி செய்தால் தடைகள் அனைத்தும் தகர்ந்து வாழ்வில் மேன்மை அடையலாம்.

ஒவ்வொருவருக்கும் குலதெய்வமும் ,இஷ்ட தெய்வமும் தனித்தனியாக உண்டு.அதுதவிர பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கும் பரிகாரத் திருத்தலங்களுக்கும் சென்று வழிபாடுகள் செய்வதையும் வழக்கமாக வைத்திருப்போம் . குலதெய்வ வழிபாடும் அதை நமக்கு அடையாளம் காட்டியம் முன்னோர்களையும் வழிபடுவது மிக மிக அவசியம்.

month of markazhi,ideology,ancestors,darbhanam,annathanam ,மார்கழி மாதம், ஐதீகம், முன்னோர்கள், தர்ப்பணம், அன்னதானம்

மாத அமாவாசைகள் மற்றும் திதி தினங்கள் மட்டுமல்ல ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின் போதும் முன்னோர்களுக்கு வழிபாடு செய்ய வேண்டியது அவசியம். மாதப் பிறப்பு நாட்களில் தர்ப்பணம் செய்யும் போதும் எள்ளும் தண்ணீரும் அர்க்யம் செய்து அவர்களை ஆராதிக்கலாம்.

இன்றைய மாதப்பிறப்பு நாளில் கோத்திரம் மற்றும் முன்னோர்களின் பெயர்களைச் சொல்லி எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்து அரிசி, வாழைக்காய், வெற்றிலை, பாக்கு, தட்சணை வழங்கி முடிந்த வரை அன்னதானம் வழங்கலாம். இப்படி செய்வதன் மூலம் முன்னோர்கள், நமது தலைமுறையை வாழையடி வாழையாக தழைக்கச் செய்வார்கள் என்பது ஐதீகம்.

Tags :