Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • கொரோனா அச்சுறுத்தலால் உற்சாகம் குறைந்த கிருஷ்ண ஜெயந்தி

கொரோனா அச்சுறுத்தலால் உற்சாகம் குறைந்த கிருஷ்ண ஜெயந்தி

By: Nagaraj Sun, 09 Aug 2020 7:40:46 PM

கொரோனா அச்சுறுத்தலால் உற்சாகம் குறைந்த கிருஷ்ண ஜெயந்தி

கொரோனாவால் இந்தாண்டு கிருஷ்ண ஜெயந்தியை விழாவை வழக்கம் போல் கொண்டாட முடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.

சிறுவரும், சிறுமியரும் பால கண்ணனை போலவும், அழகிய ராதையை போலவும் வேடமணிய, பிஞ்சு குழந்தையின் பாதங்கள் கண்ணன் வீட்டிற்குள் வருகைத் தருவது போல நடந்து தடம் பதிக்க, இளம் காளையர்கள் உறியடித்து வீரத்தையும், உற்சாகத்தையும் வெளிபடுத்த, கன்னிப் பெண்கள், கோலாட்டம் ஆடி, தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்த, பெற்றோர்களும், பெரியோர்களும், இதனை இனிப்பு பலகாரங்களோடு கண்டு ஆனந்தம் கொள்ள, கோலாகலமாக கொண்டாட்டம் நிறைந்திருக்கும் ஜன்மாஷ்டமி என்னும், கிருஷ்ண ஜெயந்தி (janmashtami) பண்டிகை அனைத்து வீடுகளிலும் ஒரு எதிர் பார்க்கும் பண்டிகையாக அமைகின்றது.

corona,celebration,houses,krishna jayanti ,கொரோனா, கொண்டாட்டம், வீடுகள், கிருஷ்ண ஜெயந்தி

இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியை மக்கள் உற்சாகமாக கொண்டாட முடியாத நிலை. காரணம் கொரோனா ஊரடங்கால். ஒவ்வொரு வருடமும், இந்தியா முழுவதும், இந்த ஜென்மாஷ்டமி பண்டிகை கொண்டாப்படுகின்றது. கண்ணன் பிறந்த இந்த திருநாளை அனைவரும், குதூகலத்தோடு மகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.

ஒவ்வொரு மாநிலத்திலும், இந்த ஜென்மாஷ்டமி வெவ்வேறு வகையில் கொண்டாடப் படுகின்றது. அவரவர் மாநில மற்றும் கலாசார அடிப்படையில், இந்த திருவிழாவை கோவில்களிலும், வீடுகளிலும் கொண்டாடி வருகின்றனர். இனிப்பு பலகாரங்கள் மற்றும் வீடு முழுவதும் அலங்காரங்கள் மட்டுமின்றி, மனம் முழுவதும் நிறைந்த மகிழ்ச்சியோடு மக்கள் இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தலால் வழிபாட்டுதலங்கள் திறக்கப்படாத நிலையில் மக்கள் தங்களின் வீடுகளிலேயே கொண்டாட தயாராகி வருகின்றனர்.

Tags :
|
|