Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு இனிப்பு வெல்லச்சீடை செய்முறை

கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு இனிப்பு வெல்லச்சீடை செய்முறை

By: Nagaraj Sat, 08 Aug 2020 8:16:38 PM

கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு இனிப்பு வெல்லச்சீடை செய்முறை

கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யும் இனிப்புகளில் சிறப்பு இடம் வெல்லச்சீடைக்குதான். அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 2 கப்

உளுத்த மாவு - ஒரு பிடி ( வறுத்து அரைத்தது )
வெல்லம் - 1 1/2 கப்
எள் - கொஞ்சம்
ஏலப்பொடி பொடி - 1/4 டீ ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
பொறிக்க - எண்ணெய்

wheatgrass,wholemeal flour,jam,sesame ,வெல்லச்சீடை, உளுத்த மாவு, வெல்லம், எள்

செய்முறை: முதலில் அரிசியை களைந்து உலர்த்தவும். இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம். அரிசி காய்ந்ததும், மிக்சியில் மாவாக அரைத்து, சலித்து வைக்கவும். சலித்த மாவை வெறும் வாணலியில் வறுக்கவும்.
எள்ளை சுத்தம் செய்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு தூள் செய்த வெல்லத்தை போட்டு நன்றாக கலக்கவும். வெல்லம் கரைந்ததும், வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கும் போது, எள், ஏலப்பொடி எல்லாம் போட்டு நன்கு கலக்கவும்.

பின் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, நெய் போட்டு இறக்கி வைத்து நன்கு கிளறவும். கொஞ்சம் ஆறினதும் அழுத்தி பிசையவும். ஒரு வெள்ளை துணி அல்லது எண்ணெய் தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்னதாக ஆனால் உப்பு சீடையை விட சற்று பெரியதாக மொத்த மாவையும் உருட்டி வைக்கவும்.

அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொரித்து எடுக்கவும். 'கரகர' ப்பான 'வெல்ல சீடை' ரெடி.

Tags :
|