Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • தேங்காய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

தேங்காய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By: Nagaraj Mon, 07 Dec 2020 08:15:06 AM

தேங்காய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பெரும்பாலும் ஆன்மீக வழிபாடுகளில் பெரிதாக தேங்காய் தீபம் இடம் பெறுவது இல்லை. ஏனெனில் தேங்காய் தீபத்தை எல்லா தெய்வங்களுக்கும் ஏற்ற மாட்டார்கள். ஒரு சில பிரச்சினைகளை போக்கவே தேங்காய் தீபம் ஏற்றப்படுகின்றது.

இருப்பினும் இத்தீபம் ஏற்றுவதனால் பல நன்மைகள் உண்டு. அந்தவகையில் தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பண ரீதியான வில்லங்கமான விஷயங்களில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்கள் வீட்டின் பூஜை அறையில் சுக்கிர ஹோரையில் திங்கள் கிழமையில் தேங்காய் தீபத்தை ஏற்றி வழிபடுவார்கள்.

coconut lamp,marriage ban,career prosperity,good groom ,தேங்காய் தீபம், திருமணத் தடை, தொழில் வளம், நல்ல வரன்

வேலை இல்லாதவர்கள் வேலை கிடைக்கவும், குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறவும், அம்மன் போன்ற பெண் தெய்வங்களுக்கு இரண்டு தேங்காய்களை உடைத்து தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.

தேங்காய் தீபம் ஏற்றும் பொழுது தேங்காய் உள்ளே நெய் ஊற்ற வேண்டும். தேங்காய் தீபத்தில் நெய் தவிர வேறு எந்த எண்ணெய்களையும் பயன்படுத்துவது கிடையாது. திருமண தடை நீங்கவும், தொழில் வளம் சிறக்கவும், நல்ல வரன் அமையவும், வேண்டுதல்கள் விரைவாகவும் பலிக்கும்.

Tags :