Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • ஆன்மீக அலைகள் வீசும் கார்த்திகை மாதத்தின் சிறப்பு பற்றி தெரிந்து கொள்வோம்

ஆன்மீக அலைகள் வீசும் கார்த்திகை மாதத்தின் சிறப்பு பற்றி தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Mon, 16 Nov 2020 8:31:22 PM

ஆன்மீக அலைகள் வீசும் கார்த்திகை மாதத்தின் சிறப்பு பற்றி தெரிந்து கொள்வோம்

பண்டிகைகள் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள்... ஆன்மீக அலைகள் வீசும் கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. கார்த்திகை மாதம் தமிழ் மாதங்களில்-சித்திரை தொடங்கி 8வது மாதமாகும். ஜோதிடவியலில் சூரியன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் கார்த்திகை மாதம் என்று அழைக்கப்படுகிறது.

கார்த்திகை மாதத்தில் எந்த நாளில் என்ன பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று பார்க்கலாம். கார்த்திகை மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு யெக்ஞபுருஷன் என்றும் பெண் குழந்தைகளுக்கு லட்சுமி என்றும் பெயர் வைக்கலாம். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் பல்வேறு சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன.

பலவிதமான பண்டிகைகள் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன இவை வாழ்க்கையில் உயர்வையையும் மேன்மையையும் கொடுக்கின்றன என்பது நம்பிக்கை. கார்த்திகை மாதத்தில் சோமவார விரதம் இருந்து சிவ ஆலயம் சென்று வணங்கினால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

karthika month,maha deepam,festivals,thiruvannamalai,prosperity ,கார்த்திகை மாதம், மகா தீபம், பண்டிகைகள், திருவண்ணாமலை, சுபிட்சம்

கார்த்திகை 1, 8,15,22,29 ஆகிய 5 நாட்களும் சிவ ஆலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். சிவ பெருமானை தரிசனம் செய்யலாம். கார்த்திகை மாதத்தில் 2ஆம் தேதி முடவன் முழுக்கு கடைபிடிக்கப்படுகிறது. ஐப்பசி மாதம் முழுவதும் ஒரு நாள் கூட காவேரியில் நீராட முடியாதவர்கள் இன்று அவசியம் காவிரியில் நீராட வேண்டும். இதனால் துலாஸ்நானம் செய்த புண்ணிய பலன் கிடைக்கும்.

கார்த்திகை 3ஆம் தேதி நாக சதுர்த்தி விநாயகரை வழிபட கடன் பிரச்சினை நீங்கும். கார்த்திகை 5 வெள்ளிக்கிழமை கந்த சஷ்டி முருகன் ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடைபெறும். கார்த்திகை 08ம் தேதி நவம்பர் 23ஆம் நாள் திங்கட்கிழமை காலை 11-09 முதல் 11-45க்குள் வாஸ்து பூஜை செய்வது சிறப்பு. குடும்பத்தில் சுபிட்சம் அதிகரிக்கும்.

கார்த்திகை மாதம் 14ம் தேதி நவம்பர் 29ஆம் தேதி ஞாயிறு கிழமை திருக்கார்த்திகை தீப திருவிழா. திருவண்ணாமலையில் காலையில் பரணி தீபமும் மாலையில் மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.

Tags :