Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலாக ரோஜாப்பூர் கீர் செய்து அசத்துங்கள்

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலாக ரோஜாப்பூர் கீர் செய்து அசத்துங்கள்

By: Nagaraj Sat, 08 Aug 2020 5:19:03 PM

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலாக ரோஜாப்பூர் கீர் செய்து அசத்துங்கள்

கிருஷ்ண ஜெயந்தி அன்று நிச்சயம் அனைத்து வீடுகளிலும் பால், தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றைப் பயன்படுத்தி பல பலகாரங்கள் செய்வார்கள்.

இந்த வருடம் கிருஷ்ணனை கவரும் வண்ணம் ஒரு அருமையான படையல் செய்ய நினைத்தால், ரோஜாப்பூ கீர் செய்து படையுங்கள். இது மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, வீட்டில் உள்ள குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். ரோஜாப்பூ கீர் ரெசிபி செய்முறை.

rose butter,rosewater,rice,pistachios,raisins ,ரோஜாப்பூ கீர், ரோஸ்வாட்டர், அரிசி, பிஸ்தா, உலர் திராட்சை

தேவையான பொருட்கள்

பால் - 4 கப்

அரிசி - 1/4 கப்

ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

சர்க்கரை - 1 கப்

பிஸ்தா - 10

உலர் திராட்சை - 10

ரோஸ் வாட்டர் - 1 டேபிள் ஸ்பூன்

குல்கந்த் - 10 கிராம்

ரோஜாப்பூ இதழ்கள் - 10-15

rose butter,rosewater,rice,pistachios,raisins ,ரோஜாப்பூ கீர், ரோஸ்வாட்டர், அரிசி, பிஸ்தா, உலர் திராட்சை

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி, அரிசி மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, பின் ஏலக்காய் பொடி தூவி, தீயை குறைவில் வைத்து அரிசி நன்கு வேகும் வரை 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

அரிசியானது நன்கு வெந்ததும், அதில் பிஸ்தா, உலர் திராட்சை சேர்த்து 3-4 நிமிடம் மிதமான தீயில் கிளறி விட வேண்டும். பின்பு அதனை இறக்கி குளிர வைக்க வேண்டும். கலவையானது குளிர்ந்ததும், அதில் ரோஸ் வாட்டர், குல்கந்த் மற்றும் ரோஜாப்பூ இதழ்களை சேர்த்து நன்கு கிளறி பரிமாறினால், ரோஜாப்பூ கீர் ரெடி!!!

Tags :
|