Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • கிருஷ்ண ஜெயந்திக்கு அருமையான ஒரு வட இந்திய இனிப்பு ரெசிபி மிஸ்டி தோய்

கிருஷ்ண ஜெயந்திக்கு அருமையான ஒரு வட இந்திய இனிப்பு ரெசிபி மிஸ்டி தோய்

By: Nagaraj Sat, 08 Aug 2020 11:24:42 AM

கிருஷ்ண ஜெயந்திக்கு அருமையான ஒரு வட இந்திய இனிப்பு ரெசிபி மிஸ்டி தோய்

கிருஷ்ண ஜெயந்தி வந்தாலே நமக்கு குஷியாக இருக்கும். இந்நாளில் கிருஷ்ணனுக்கு பிடித்த பலகாரங்களான பால் பொருட்கள் கொண்டு செய்யப்படும் பலகாரங்களை அதிகம் செய்வார்கள். அத்துடன் சீடை, முறுக்கு போன்றவற்றையும் செய்வார்கள்.

இந்தியாவிலேயே வட இந்தியாவில் மிகவும் கலக்கலாக கொண்டாடப்படும் விழா தான் கிருஷ்ண ஜெயந்தி. அங்கு கிருஷ்ணனுக்கு பிடித்தவாறு பல இனிப்புப் பண்டங்களை செய்வார்கள். அவை அனைத்தும் மிகவும் சுவையானதாக இருக்கும். அதிலும் பெங்காலி ரெசிபிக்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.

அந்த வகையில் பெங்காலியில் கிருஷ்ண ஜெயந்திக்கு செய்யப்படும் ஒரு இனிப்பான ரெசிபி தான் மிஸ்டி தோய். இதன் செய்முறை.

misty toy,sugar,yogurt,milk,dessert ,மிஸ்டி தோய், சர்க்கரை, தயிர், பால், இனிப்பு

தேவையான பொருட்கள்

பால் - 1 லிட்டர்

தயிர் - 3-4 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - 250 கிராம்

செய்முறை: முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து, பாதியாக சுண்ட வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை இறக்கி குளிர வைக்க வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் தயிர் மற்றும் சர்க்கரையைப் போட்டு, உருக வைக்க வேண்டும். எப்போது சர்க்கரையானது உருகிவிட்டதோ, அப்போது பாலை அத்துடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு அதனை ஓரளவு சுண்ட விட்டு, ஒரு பானையில் ஊற்றி, சுத்தமான துணியால் மூடி, தனியாக 3-4 மணிநேரம் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை எடுத்து சாப்பிட்டால், இனிப்பான மிஸ்டி தோய் ரெசிபி ரெடி!!!

Tags :
|
|
|