Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • ஆலய வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் மக்கள் விசனம்

ஆலய வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் மக்கள் விசனம்

By: Nagaraj Mon, 12 Oct 2020 3:57:33 PM

ஆலய வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் மக்கள் விசனம்

மக்கள் விசனம்... நெடுங்கேணி- வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு பொலிஸார் மற்றும் தொல்பொருட் திணைக்களங்களால் தடை ஏற்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது வனவளத்திணைக்களமும் தடை ஏற்படுத்துவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலயத்திற்கு சென்ற பொதுமக்களை நெடுங்கேணி பிரிவை சேர்ந்த வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆலயத்திற்கு செல்லவிடாமல் தடுத்துள்ளதுடன், அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.

விடுமுறை தினம் என்பதனால் அதிகமான பொதுமக்கள் ஆலயத்தில் தரிசிக்க சென்ற நிலையில், வனவளத் திணைக்களத்தின் செயற்பாட்டினால் ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர்.

இதுவரை ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களம் மற்றும் நெடுங்கேணி பொலிஸாரே தடையை ஏற்படுத்திவந்த நிலையில், தற்போது வனவளத்திணைக்களமும் தடை ஏற்படுத்துவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

public,sadness,politicians,ban,temple ,பொதுமக்கள், விசனம், அரசியல்வாதிகள், தடை, ஆலயம்

ஆலயம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கு, வவுனியா நீதிமன்றில் இடம்பெற்றுவரும் நிலையில் அதனையும் பொருட்படுத்தாமல் அரச திணைக்களங்களால் இவ்வாறான தடை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வெடுக்குநாறி மலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் அங்கு செல்வதற்கும் பொதுமக்கள் மற்றும் ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கும் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பாக வன்னியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல்வாதிகளும் அக்கறையற்று இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கடந்த வாரமளவில் கூட ஆலயத்தில் நீண்டகாலமாக பூசை செய்து வந்த பூசாரியை ஆலய வளாகத்திற்குள் செல்லவேண்டாம் என்றும், சென்றால் கைதுசெய்வோம் என்றும் நெடுங்கேணி பொலிஸார் அச்சுறுத்தியிருந்தனர் எனவும் மக்கள் சுட்டிக்காட்டினர்.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஆலயத்தினை அபகரிப்பதற்காக பல்வேறு நெருக்குதல்களும் தடைகளும் தொல்பொருட்திணைக்களம் மற்றும் நெடுங்கேணி பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த விடயங்கள் தொடர்பாக அரசியல்வாதிகள் அக்கறை செலுத்தாமல் நழுவிச்செல்வதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Tags :
|
|