Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • கொரோனா கட்டுப்பாடுகளால் சபரிமலை பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது

கொரோனா கட்டுப்பாடுகளால் சபரிமலை பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது

By: Nagaraj Sun, 13 Dec 2020 3:32:36 PM

கொரோனா கட்டுப்பாடுகளால் சபரிமலை பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது

பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடியது... கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் இன்றி காணப்படுகிறது.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து, வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, சபரிமலையிலும் நவம்பரில் தொடங்கும் மண்டல பூஜைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே அனுமதிப்பது என்றும், ஆன்லைனில் முன்பதிவு போது பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன்பு பரிசோதனை செய்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழை இணைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

corona,control,devotees,crowd,no,sabarimala ,கொரோனா, கட்டுப்பாடு, பக்தர்கள், கூட்டம், இல்லை, சபரிமலை

நிலக்கல்லில் பக்தர்களுக்கு ஆண்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது. இதனிடையே, சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15-ந்தேதி திறக்கப்பட்டது.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய வார நாட்களில் தினசரி 1,000 பக்தர்களும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் 2 ஆயிரம் பக்தர்களும் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

சாமியை தரிசிக்க, பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 2-ம் தேதி முதல் தினமும் 2 ஆயிரம் பக்தர்களும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 3 ஆயிரம் பக்தர்களும் சாமி தரிசனம் செய்து அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், ஒவ்வொரு வருடமும் மண்டல பூஜையின் போது பக்தர்களால் நிரம்பி வழியும் சபரிமலை கோவில் தற்போது கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் கூட்டம் இன்றி காணப்படுகிறது.

Tags :
|
|
|