Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பிரசாதம் அயோத்தி கோயில் பூமி பூஜைக்கு செல்கிறது

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பிரசாதம் அயோத்தி கோயில் பூமி பூஜைக்கு செல்கிறது

By: Nagaraj Fri, 31 July 2020 8:42:05 PM

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பிரசாதம் அயோத்தி கோயில் பூமி பூஜைக்கு செல்கிறது

அயோத்திக்கு செல்கிறது திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பிரசாதம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு புனித தலங்களில் இருந்து புனித நீர், பிரசாதம், பூஜை பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

bhoomipooja,ram temple,srirangam,offerings,administrators ,பூமிபூஜை, ராமர் கோவில், ஸ்ரீரங்கம், பிரசாதம், நிர்வாகிகள்

இந்த வகையில் ராமரின் குல தெய்வ கோவிலாக கருதப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இருந்து பிரசாதம் எடுத்துச் செல்லப்படுகிறது. கோவில் சார்பில், தயாரிக்கப்பட்ட அரங்கநாதரின் பிரசாதமானது பட்டர்களால் எடுத்து வரப்பட்டு இந்து கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த பிரசாதத்தை ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையில் சேர்ப்பதற்கு இந்து அமைப்பின் நிர்வாகிகள் கொண்டு செல்கின்றனர்.

Tags :