Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • வீட்டில் விளக்கேற்றும் போது எதை செய்ய வேண்டும்! எதை செய்யக்கூடாது!!!

வீட்டில் விளக்கேற்றும் போது எதை செய்ய வேண்டும்! எதை செய்யக்கூடாது!!!

By: Nagaraj Sun, 14 June 2020 8:35:29 PM

வீட்டில் விளக்கேற்றும் போது எதை செய்ய வேண்டும்! எதை செய்யக்கூடாது!!!

வீட்டில் பூஜையறையில் விளக்கு ஏற்றுகிறோம். இதை ஏற்றும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் இருக்கிறது. அதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

வீட்டில் காலை 3 முதல் 5 மணிக்குள் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் சர்வமங்கள யோகம் உண்டாகும். அதே போல் மாலையில் 6 மணியளவில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் வேலை, நல்ல வாழ்க்கைத்துணை, புத்திர பாக்கியம், குடும்ப வளம் ஆகியன கிடைக்கும்.

lighting,milk,whey,salt,bran,lime ,விளக்கேற்றுதல், பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு

தினமும் காலையில் வாசலில் சாணம் தெளித்து, உடல் மற்றும் மனம் சுத்தத்துடன் விளக்கேற்ற வேண்டும். அதேபோல் மாலையிலும் வாசல் தெளித்து கோலம் போட்ட பிறகே விளக்கு ஏற்ற வேண்டும். வீட்டில் விளக்கு ஏற்றும்போது பின் வாசல் கதவை மூடிவிட வேண்டும். அப்படி கதவு இல்லையென்றால் ஜன்னலை சாத்திவிட வேண்டும்.

வீட்டில் விளக்கேற்றியவுடன் தலை சீவுவது, வீடு கூட்டுவது, துணி துவைப்பது, குளிப்பது போன்ற செயல்களை செய்ய கூடாது.
அதேபோல் விளக்கு ஏற்றும்போது தூங்கி கொண்டிருக்க கூடாது. மேலும் வீட்டில் விளக்கு ஏற்றி விட்டால் பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவற்றை கொடுக்க கூடாது.

lighting,milk,whey,salt,bran,lime ,விளக்கேற்றுதல், பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு

வீட்டில் உள்ள சமையலறையில் தினமும் ஒரு அகல் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் வீட்டில் உணவு பஞ்சம் ஏற்படாது. வீட்டின் வெளியில் உள்ள தோட்டத்திலோ அல்லது பால்கனி போன்ற இடத்திலோ எமனை நினைத்து கொண்டு விளக்கு ஏற்றி வந்தால் மரண பயம் போகும். மேலும் ஆயுள் நீடிக்கும்.

இவற்றை சரியான முறையில் கடைப்பிடித்து வந்தால் வீட்டில் அனைத்து செல்வங்களும் நிலை கொள்ளும். ஏதோ விளக்கேற்றுகிறோம் என்று இருக்காமல் அதை செய்வதை சரியான முறையில் செய்தால் நிச்சயம் பலன்கள் கிடைக்கும்.

Tags :
|
|
|
|