Advertisement

அழகை இரு மடங்காக மாற்ற கடைபிடிக்க வேண்டிய 7 குறிப்புகள்!!

By: Monisha Mon, 03 Aug 2020 3:47:22 PM

அழகை இரு மடங்காக மாற்ற கடைபிடிக்க வேண்டிய 7 குறிப்புகள்!!

உங்களின் அழகையும் உடல் ஆரோக்கியத்தையும் இரு மடங்காக மாற்ற காலை மற்றும் மாலையில் ஒரு சில செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும். அவை, நமது சருமத்தை கரும்புள்ளிகள், பருக்கள், முக வறட்சி, எண்ணெய் வடிதல் போன்ற பிரச்சினைகளில் இருந்து காக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் காண்போம்.

1) காலையில் எழுந்த உடன் முகத்தை நீரில் கழுவ வேண்டும். நேரம் இருந்தால் 1 ஸ்பூன் காபி பொடி மற்றும் அரை ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் சென்று முகத்தை கழுவலாம். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் சேர்ந்துள்ள நச்சுக்கள் வெளி வரும்.

2) சிலர் குளிப்பதற்கு நேரமில்லாமல் இதை மறந்தே விடுவர். இவர்களை தவிர்த்து மற்றவர்கள், சோப்பிற்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தி குளித்து வந்தால் தோல் பொலிவு பெறும். கூடவே தோலில் உள்ள இறந்த செல்களை இது வெளியேற்றியும் விடும்.

3) சருமம் எப்போதுமே ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். இல்லையெனில் எவ்வளவு தான் அழகு பொருட்களை பயன்படுத்தினாலும் முக அழகு மோசமாக தான் இருக்கும். ஆதலால், எப்போதுமே முகத்தை வறட்சியாக இல்லாமல் ஈரப்பதமாகவே வைத்து கொள்ளுங்கள்.

face,blackheads,pimples,facial dryness,oily discharge ,முகம்,கரும்புள்ளிகள்,பருக்கள்,முக வறட்சி,எண்ணெய் வடிதல்

4) முகத்தில் மேக்கப் போடுவது தவறில்லை. ஆனால், எப்போதுமே வேதி தன்மை குறைந்த இயற்கை பொருட்களான மேக்கப் பொருட்களை பயன்படுத்தி மேக்கப் போட்டால் நல்லது. இல்லையெனில் முகத்தின் அழகை பாழாக்கி விடும்.

5) முக அழகாக இருக்க முகத்தில் சில வகை குறிப்புகளை பயன்படுத்தினால் மட்டும் போதாது. மாறாக சத்தான உணவுகளையும் சாப்பிட வேண்டும். குறிப்பாக காலை உணவை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். இது உடலின் முழு ஆரோக்கியத்திற்கும் சிறந்த மருந்தாக செயல்படும்.

6) எப்போதுமே வெளியில் போய்விட்டு வந்தால், வெளியில் உள்ள தூசுகள், அழுக்குகள், மேலும் சில நச்சுக்கள் ஒட்டி கொள்ளும். இதை போக்குவதற்கு எப்போதுமே 1 நிமிடம் முழுமையாக முகத்தை கழுவுவது நல்லது. இவ்வாறு செய்து வந்தால் உங்களின் முகத்தில் ஏற்படும் மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.

7) எப்போதுமே இரவு நேரத்தில் அதிக எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிட கூடாது. இது உடலில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு முகத்தின் அழகையும் கெடுக்கும். ஆதலால், எப்போதுமே இரவு நேரத்தில் சத்தான காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.

Tags :
|