Advertisement

50 வயதை நெருங்கும் பெண்கள் சரும பிரச்சினையிலிருந்து தப்பிக்க இதை பண்ணுங்க!!

By: Monisha Fri, 31 July 2020 4:46:36 PM

50 வயதை நெருங்கும் பெண்கள் சரும பிரச்சினையிலிருந்து தப்பிக்க இதை பண்ணுங்க!!

50 வயதை நெருங்கும் பெண்கள் சரும சுருக்கம், சரும வறட்சி போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகுவார்கள். ஒருசிலர் சரும அழகை மேம்படுத்துவதற்கு அதிகமுயற்சி எடுப்பார்கள். ஆரோக்கிய வாழ்க்கை முறை சார்ந்த பழக்கவழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே அழகு கூடும்.

50 வயதில் பெண்களுக்கு ஹார்மோன்களின் செயல்பாடு சீரற்ற நிலையில் இருக்கும். அதன் தாக்கம் மாதவிடாய் சுழற்சியில் வெளிப்படும். மேலும் சரும வறட்சி, முகப்பரு போன்ற பிரச்சினைகளும் ஏற்படும். சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோன்கள் சீராக செயல்படுவதற்கு வழிவகை செய்யலாம்.

பெர்ரி வகை பழங்கள், வால்நெட், அவகோடா, மஞ்சள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவை ஹார்மோன்களின் சீரான செயல்பாட்டுக்கும், சரும ஆரோக்கியத்திற்கும் வழிவகை செய்யும்.

women,skin wrinkles,dry skin,hormones,acne ,பெண்கள்,சரும சுருக்கம், சரும வறட்சி,ஹார்மோன்,முகப்பரு

ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து பெண்கள் சாப்பிட்டு வரலாம். அவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலின் ஈரப்பதத்தை சம நிலையில் தக்கவைத்து வயதான தோற்றத்துக்கான அறிகுறிகளை தாமதப் படுத்தும். தயிர், மோர், பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவை சரும ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.

உடலில் இன்சுலின் அளவு அதிகமாக இருப்பதும் சரும சுருக்கத்திற்கு வழிவகுக்கும். பேக்கரி வகை பலகாரங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். 50 வயதை கடந்தவர்கள் இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பங்கம் விளைவிக்கும்.

உடலில் ஆக்சிஜன் அளவு சீராக இருப்பதும் தோல் சுருக்கத்தை கட்டுப்படுத்தும். வீட்டில் உள் அலங்கார தாவரங்கள் வளர்ப்பதன் மூலம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். அதனை சுவாசிப்பதன் மூலம் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தலாம்.

Tags :
|