Advertisement

அக்குள் மற்றும் தொடை பகுதி கருப்பாக இருக்கிறதா? இதை ட்ரை பண்ணுங்க!

By: Monisha Tue, 01 Dec 2020 1:09:51 PM

அக்குள் மற்றும் தொடை பகுதி கருப்பாக இருக்கிறதா? இதை ட்ரை பண்ணுங்க!

வெள்ளை நிறமாக இருப்பவர்கள் சிலருக்கு கழுத்து, அக்குள் மற்றும் தொடை பகுதியில் கறுத்து பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். இது மொத்த உடல் அழகையே கெடுத்து விடும். இதனை எளிமையான முறையில் இயற்கையாக போக்குவது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்
மஞ்சள் – 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – சிறிதளவு
எலுமிச்சம் பழம் – 1
தக்காளி – 1
அரிசி மாவு – 1 ஸ்பூன்
சர்க்கரை – அரை ஸ்பூன்
காபி பவுடர் – அரை ஸ்பூன்

neck,armpits,thighs,coconut oil,tomatoes ,கழுத்து,அக்குள்,தொடை,தேங்காய் எண்ணெய்,தக்காளி

செய்முறை
முதலாவது சிறிதளவு தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். கலக்கிய பின் அதில் எலுமிச்சம் பழம் சாற்றை பிழிந்து விட்டு அதனை நன்கு கலக்குங்கள். இந்த கலவையை எந்த பகுதிகளில் எல்லாம் கருமை நிறம் இருக்கிறதோ அந்த பகுதிகளில் எல்லாம் வட்ட வடிவில் 10 நிமிடங்களுக்கு தடவி கொள்ளுங்கள். அதன் பின் ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு எடுத்து அதனுடன் தக்காளியில் பாதி துண்டை எடுத்து அதில் உள்ள சாற்றை பிழிந்து விடுங்கள்.

அதன்பின் அதில் சர்க்கரை மற்றும் காபி பவுடர் கலந்து நன்கு கலக்கி கொள்ளுங்கள். கலக்கிய இந்த சாற்றை மீதம் இருக்கும் ஒரு துண்டு தக்காளியை எடுத்து அதில் முக்கி ஏற்கனவே மசாஜ் செய்த இடங்களில் பத்து நிமிடங்கள் மசாஜ் செய்து கொள்ளுங்கள். இப்படி செய்து வர கருமை நிறங்கள் மாறி வெள்ளையாக மாறும்.

மேலும் முகம் கருமையாக இருப்பவர்கள் கூட இதனை செய்தால் முகம் பளிச்சிடும். ஏனென்றால் தக்காளியில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடன்ட் கருமையான இடங்களை வெள்ளையாக மாற்றுவது மட்டுமல்லாமல் சருமத்தையும் பொலிவுடன் மாற்றும். இதனை இரண்டு நாள்கள் செய்தாலே நல்ல மாற்றத்தை காண முடியும்.

Tags :
|
|