Advertisement

முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு தரும் வாழைப்பழத் தோல்

By: Monisha Tue, 04 Aug 2020 2:59:49 PM

முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு தரும் வாழைப்பழத் தோல்

வாழைப்பழத் தோலை பயன்படுத்தி முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு காணலாம். சரும பொலிவையும் மெருகேற்றலாம்.

வாழைப்பழத்தோலுடன் பால்
பாலை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். ஓரளவு உலர்ந்ததும் காட்டன் துணியால் முகத்தை துடைக்க வேண்டும். அதன் பிறகு வாழைப்பழத்தோலின் உள் பகுதியை எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சிடும்.

கற்றாழை ஜெல்லுடன் வாழைப்பழ தோல்
இரண்டையும் சேர்த்து பசை போல் குழைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்துவந்தால் முகப்பரு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணலாம்.

acne,banana skin,milk,cactus,honey ,முகப்பரு,வாழைப்பழத் தோல்,பால்,கற்றாழை,தேன்

வாழைப்பழ தோல் மற்றும் தேன்
இரண்டையும் சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் ஒருதடவை இப்படி செய்தால், முகப்பருக்களை போக்கலாம். சருமத்தில் ஈரப்பத தன்மையை தக்கவைக்கலாம். சரும வறட்சியை கட்டுப்படுத்தலாம். முகப் பருவால் ஏற்படும் வீக்கத்தை தடுக்கலாம்.

வாழைப்பழ தோல் மற்றும் மஞ்சள் தூள்
இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வரலாம். முகப்பரு பிரச்சினையால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க இது உதவும். இரண்டு நாட் களுக்கு ஒருமுறை மேற்கண்ட கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.

Tags :
|
|
|