Advertisement

புறஊதா கதிர்களிடமிருந்து சருமத்தை பாதுகாக்கும் தேங்காய் எண்ணெய்!

By: Monisha Tue, 22 Dec 2020 10:46:34 AM

புறஊதா கதிர்களிடமிருந்து சருமத்தை பாதுகாக்கும் தேங்காய் எண்ணெய்!

தேங்காய் எண்ணெய் பல்வேறு ஆழகு நன்மைகளை தருகிறது. சருமத்தை பாதுகாப்பதிலும், சருமத்தில் ஏற்படும் தொற்றை தடுப்பதிலும் தேங்காய் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காய் எண்ணெய் பூசுவதன் மூலம் உலர்ந்த கைகளால் ஏற்படும் பிரச்சினையை தீர்க்க முடியும்.

தேங்காய் எண்ணெய் ஈரப்பதமூட்டும் திறன்களைக் கொண்டுள்ளது. இது முகத்தை சுத்தம் செய்ய உதவும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளையும் கொண்டுள்ளது. தேங்காய் எண்ணெய் பாக்டீரியாக்களைக் கொன்று பருக்களை அகற்ற உதவும்.

தேங்காய் எண்ணெய் சிறந்த ஒப்பனை நீக்கி ஆகும். இது எரிச்சலிலிருந்து விடுபட உதவும். இது ஒரு சிறந்த சன்ஸ்கிரீன் ஆகும். இது தீங்கு விளைவிக்கும் புறஊதா கதிர்களிடமிருந்து சருமத்தை பாதுகாக்கும்.

coconut oil,beauty,skin,pimples,sunscreen ,தேங்காய் எண்ணெய்,அழகு,சருமம்,பருக்கள்,சன்ஸ்கிரீன்

தேங்காய் எண்ணெய் சருமத்தின் வயதான செயல்முறையை குறைக்கிறது. சிறிது தேங்காய் எண்ணெய்யில் தேய்த்துக் கொள்வதன் மூலம், வயதான தோற்றம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

தேங்காய் எண்ணெய் சருமத்தில் ஏற்படும் அரிப்புகளை நீக்குகிறது. இது ஒரு இயற்கை டியோடரண்டாக வேலை செய்யும். தேங்காய் எண்ணெய் கூந்தலின் உச்சந்தலை வறட்சியை நீக்குகிறது. உங்கள் தலைமுடியை தேங்காய் எண்ணெய்யுடன் வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டுமுறை மசாஜ் செய்துவந்தால் இந்த பிரச்சனை மறைந்துவிடும்.

Tags :
|
|