Advertisement

முக சுருக்கத்தை போக்கும் வெள்ளிரிக்காய் ஃபேஸ் பேக்!

By: Monisha Mon, 19 Oct 2020 3:19:07 PM

முக சுருக்கத்தை போக்கும் வெள்ளிரிக்காய் ஃபேஸ் பேக்!

இன்றய காலக்கட்டத்தில் இளம் பருவத்தினர் முக சுருக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சாதாரணமாக வயது செல்ல செல்ல முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். ஆனால் தற்போது இளம் பருவத்தினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வயதிற்கு முன்பே ஏற்படும் இந்த முக சுருக்கத்தை எளியமுறையில் இயற்கை முறையில் போக்க உதவும் வெள்ளிரிக்காய் ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி? என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

வெள்ளரிக்காய் – 1(சிறியது)
முட்டை – 1 (வெள்ளைகரு மட்டும்)

செய்முறை
வெள்ளரிக்காயை தோல் நீக்கி அதை நன்கு மசியாக அரைத்து விடுங்கள். அதன்பின் அதில் முட்டையை உடைத்து அதன் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து அரைத்து வைத்திருக்கும் வெள்ளிரிக்காய் மற்றும் முட்டை வெள்ளைக்கருவை நன்றாக கலக்கவும்.

cucumber,egg,facial wrinkle,face pack,beauty ,வெள்ளரிக்காய்,முட்டை,முக சுருக்கம்,ஃபேஸ் பேக்,அழகு

இந்த பேக்கினை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். இப்படி நீங்கள் வாரத்துக்கு இரண்டு நாள் செய்து வந்தால் சருமத்தின் சுருக்கங்களை படிபடியாக குறைக்கலாம்.

மேலும் சருமம் சுருகுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது கோபம் என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஆகவே நீங்கள் அதிகம் கோப படுகிறவர்களாக இருந்தால் அந்த குணத்தையும் மாற்ற முயற்சி செய்யுங்கள்.

Tags :
|