Advertisement

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வெந்தயம்!

By: Monisha Mon, 13 July 2020 11:42:04 AM

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வெந்தயம்!

வெயில் காலங்களில் சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. சரும தோல்கள் மிகவும் மென்மையானது. சுட்டெரிக்கும் வெயிலில் வெளியில் சென்றால், தீ பட்ட சணல் எவ்வாறு எரிந்து விடுகிறதோ, அது போல தான் நமது சருமமும். மென்மையான தோல்களை கொண்டிருப்பதால், வெயிலில் வெளியில் செல்லும் போது, பல சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை வெந்தயத்தை பயன்படுத்தி எளிதில் சரி செய்யலாம்.

சருமதுளை அடைப்பு
தேவையானவை: வெந்தயம், பால்

நமது சருமத்திற்கு வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயல்படுகிறது. தினமும் வெந்தயத்தை பாலுடன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கள் அனைத்தும் நீங்கி சருமம் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

skin,soft,dill,milk,water ,சருமம்,மென்மை,வெந்தயம்,பால்,தண்ணீர்

கருமை நீங்க
தேவையானவை: வெந்தயம், பால், தண்ணீர்

வெந்தயத்தை நீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்து வந்தால், வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்த பின் சருமம் கருமை அடைவதை தடுக்கலாம்.

பருக்கள்
தேவையானவை: வெந்தயப்பொடி, தயிர்

வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, நிறம் அதிகரிக்கும். ஆனால், வெந்தயம் குளிர்ச்சிமிக்கது. எனவே, சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் இதனை வாரம் 2 முறை போடுவது நல்லது.

கை கால் கருமை நீங்க
தேவையானவை: தண்ணீர், வெந்தயம்

வெயிலில் சருமத்தின் நிறம் கருமை நிறத்தில் மாற்றமடைந்திருந்தால், அதனை வெந்தயத்தைக் கொண்டு எளிதில் நீக்கலாம். அதற்கு 1/2 கப் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை குளிர வைத்து பின் அதனைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் முகம் கை, கால்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

Tags :
|
|
|
|