Advertisement

சரும பிரச்சனைகளை போக்க உதவும் கடலைமாவு பேஸ் மாஸ்க்!

By: Monisha Sat, 17 Oct 2020 5:42:00 PM

சரும பிரச்சனைகளை போக்க உதவும் கடலைமாவு பேஸ் மாஸ்க்!

வறண்ட சருமம் மற்றும் முகப்பரு பிரச்சனைகளை போக்க உதவும் கடலைமாவு பேஸ் மாஸ்க் தயாரிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வறண்ட சருமத்தை போக்க
உங்கள் வறண்ட சருமத்தை போக்க கடலைமாவு ஒரு சிறந்த பொருள். இதை செய்வதற்கு உங்களுக்கு தேவையான பொருள் ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் சிறிதளவு கிரீம் பால். கடலை மாவுடன் கிரீம் பால் ஊற்றி நன்கு பேஸ்ட்டாக கலக்கி அதை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடங்கள் ஊற விடுங்கள். அதன் பின் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் நன்கு கழுவுங்கள். இப்படி செய்யும் போது இந்த பேக் உங்கள் சருமத்தை மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்கும். இது மழைக்காலத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த பேக்.

dry skin,acne,face mask,face,beauty ,வறண்ட சருமம்,முகப்பரு,பேஸ் மாஸ்க்,முகம்,அழகு

முகப்பரு பிரச்சினைகளை போக்க
முகப்பரு பிரச்சினையால் பாதிக்க பட்டவர்களுக்கு கடலை மாவு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ஏனென்றால் கடலை மாவில் துத்தநாகம் உள்ளது. இது உங்கள் முகத்தில் உள்ள வீக்கமடைந்த திட்டுகளை குறைக்க உதவுகிறது. முகப்பருவை போக்க தேவையான பொருள்கள் கடலை மாவு, தேயிலை மர எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகும்.

2 தேக்கரண்டி கடலை மாவு, ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் மற்றும் 2-3 சொட்டு தேயிலை மர எண்ணெய் சேர்த்து கலக்கி இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவி வர முகப்பருக்கள் விலகி முகம் பளபளக்கும்.

Tags :
|
|