Advertisement

பொடுகு பிரச்சனையை போக்கும் இஞ்சி சாறு!

By: Monisha Sat, 31 Oct 2020 08:43:58 AM

பொடுகு பிரச்சனையை போக்கும் இஞ்சி சாறு!

பொடுகு என்பது ஆண் மற்றும் பெண் போன்ற இருபாலினத்தினருக்கும் இருக்கிறது. இந்த பிரச்னையை எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருளை கொண்டே சரி செய்யலாம். அதாவது இஞ்சி தலையில் இருக்கும் பொடுகையும் அரிப்பு பிரச்சனையையும் போக்க வல்லது. மேலும் பீட்ரூட் கூந்தலுக்கு பொலிவான தோற்றத்தையும் பளபளப்பையும் கொடுப்பதோடு பொடுகால் பாதிக்கப்பட்ட கூந்தலுக்கு வலுவை கொடுக்க உதவுகிறது. இந்த பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்
இஞ்சி சாறு
பீட்ரூட் சாறு

dandruff,ginger,beetroot,hair,beauty ,பொடுகு,இஞ்சி,பீட்ரூட்,தலைமுடி,அழகு

செய்முறை
முதலாவது இஞ்சி மற்றும் பீட்ரூட் போன்றவற்றை கூந்தலின் அளவுக்கேற்ப எடுத்து கொள்ளுங்கள். அதன்பின் இவற்றை தோல் சீவி சாறு எடுத்து கொள்ளுங்கள். அதன்பின் இரண்டையும் நன்றாக கலந்து நீர் விடாமல் உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

இதை செய்யும் போது பகலை காட்டிலும் இரவுநேரங்களில் செய்வது சிறந்தது. ஏனென்றால் இஞ்சி தலையில் நன்கு ஊற வேண்டும். அப்படி ஊறிய பின் மறுநாள் காலை தலைக்கு குளியுங்கள். தொடர்ந்து ஒரு வாரம் வரை இதை செய்துவந்தால் பொடுகு பிரச்சனை வேகமாக குறையும். இதனை செய்யும் போது பீட்ரூட் இல்லாமல் இஞ்சி சாறு மட்டும் கூட பயன்படுத்தலாம்.

Tags :
|
|