Advertisement

பண்டிகைக் காலங்களில் அனைவரையும் கவர சில எளிய குறிப்புகள்!

By: Monisha Mon, 09 Nov 2020 4:34:20 PM

பண்டிகைக் காலங்களில் அனைவரையும் கவர சில எளிய குறிப்புகள்!

தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று அடுத்தடுத்து பண்டிகைக் காலங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பண்டிகைக் காலங்களில் உங்கள் முகத்தை அனைவரையும் கவரும் வைத்திருக்க இதோ சில எளிய குறிப்புகள்!

புருவம்: முக அழகுக்கு மிகவும் முக்கியம் புருவத்தை அழகாக வைத்திருப்பது தான். ஒரு நல்ல பியூட்டீசியனை நாடுங்கள். உங்கள் புருவங்களை அழகாக ஷேப் செய்து கொள்ளுங்கள்.

முகம்: தயிர் மற்றும் தேனுடன் ஒரு சொட்டு எலுமிச்சைச் சாற்றைக் கலந்து முகத்தில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள். கழுவும் போது வட்ட வடிவில் தேய்த்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

பாதாம் மற்றும் பழுத்த பப்பாளி கலந்த பேஸ்ட்டை முகத்தில் நன்றாகத் தடவி, சுமார் 20 நிமிடங்கள் வரை ரிலாக்ஸாகப் படுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர், முகத்தை நன்றாகக் குழாய் நீரில் கழுவினால், முகம் மிருதுவாகும்.

festive,face,beauty,nature,tips ,பண்டிகை,முகம்,அழகு,இயற்கை,குறிப்புகள்

உதடு: ஃப்ரெஷ்ஷான பால் க்ரீமை உதடுகளில் ஒரு சாஃப்ட் பிரஷ்ஷின் உதவியுடன் வட்ட வடிவில் பூசித் தடவ வேண்டும். பின், ஒரு நிமிடம் கழித்து, பன்னீர் கொண்டு கழுவ வேண்டும்.

தேவையற்ற முடி: கடலை மாவு, சிறிது மஞ்சள் மற்றும் தயிர் ஆகியவை கலந்த பேஸ்ட்டை தடவி, அது நன்றாகக் காய்ந்ததும், வட்ட வடிவில் கழுவ வேண்டும். தினமும் இதைச் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

மூக்கு: மைசூர் பருப்பை ஒரு மணிநேரம் நன்றாக ஊற வைத்து, பின் அதைப் பேஸ்ட்டாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பேஸ்ட்டை மூக்கில் தடவி, அப்படியே 10 நிமிடங்கள் வரை விட்டுவிட வேண்டும். பின் ஒரு நிமிடத்திற்கு அதை நன்றாகத் தேய்த்து, பின் நீரில் கழுவ வேண்டும்.

முடி: தலை முடிக்கு டை அடிக்கும் முன், முடியில் பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவ வேண்டும். இதனால் உங்கள் நெற்றியில் தேவையில்லாமல் டையினால் ஏற்படும் கறைகளைத் தவிர்க்கலாம்.

Tags :
|
|
|