Advertisement

முடி வளர்ச்சி, முடி ஷைனிங் என எல்லாமே பெற ஹேர் ஸ்பா செய்வது எப்படி ?

By: Karunakaran Wed, 02 Dec 2020 4:39:52 PM

முடி வளர்ச்சி, முடி ஷைனிங் என எல்லாமே பெற ஹேர் ஸ்பா செய்வது எப்படி ?

நீங்கள் வீட்டில் ஹேர் ஸ்பா செய்வதாக இருந்தால் உங்கள் முடியின் தன்மைக்கேற்ற ஷாம்பு வகைகளை முதலில் தேர்ந்தெடுங்கள். பொடுகு அதிகமாக இருந்தால் அதற்கென பிரத்யேகமான பியூரி ஃபையிங் ஷாம்பு பயன்படுத்தலாம். மற்றவர்கள் டீடாக்ஸ் ஷாம்பு பயன்படுத்தலாம். ஷாம்பு பயன்படுத்திய பிறகு முடிக்கு தேவையான க்ரீம் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். உங்கள் கூந்தலுக்கேற்ற க்ரீம் வகைகளை உங்களது அழகு கலை நிபுணரோடு கலந்து தேர்வு செய்யுங்கள்.

முதலில் உங்கள் கூந்தலை சிக்கில்லாமல் சீவி வைத்துகொள்ளுங்கள். கூந்தலை நன்றாக விரித்து செளகரியமாக உட்கார்ந்து எண்ணெயை விரல்களால் தொட்டு உச்சந்தலையிலிருந்து முடியின் நுனிவரை மசாஜ் செய்யுங்கள். வட்ட வடிவ இயக்கத்தில் நன்றாக 10 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள். மண் பானையில் கொதிக்க வைத்து நீர் ஊற்றி வாயை மெல்லிய துணியால் கட்டி, வெளிவரும் ஆவி முடி மீது படும்படி முடியை காண்பிக்க வேண்டும். முகத்தின் மிது படியாமல் இருக்க முகத்தில் ஒரு துண்டு கட்டி தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை இதை செய்ய வேண்டும்.

hair spa,hair growth,hair shining,womens ,ஹேர் ஸ்பா, முடி வளர்ச்சி, முடி பளபளப்பு, பெண்கள்

முடியின் ஆழம்வரை நீராவி சென்று உள்ளே போக வேண்டும். கூந்தலில் நீராவி பிடித்தது போக இப்போது மெல்லிய துணியை குளிர்ந்த நீரில் நனைத்து அதை கூந்தலில் மென்மையாக இலேசாக இறுக்கி கட்டவும். ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி முடியை கழுவி எடுக்கவும். ஹேர் ஸ்பா க்ரீம் உங்கள் கூந்தலுக்கேற்றதை பயன்படுத்தவும். வாரத்துக்கு ஒரு முறை கூட இதை செய்யலாம்.

​நன்மைகள் : முடியின் மயிர்கால்கள் வலுவடையகூடும். உச்சந்தலையில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. இதனால் பொடுகு, அரிப்பு, நமைச்சல் பிரச்சனையும் இருக்காது. முடி அடர்த்தி அதிகரிக்கும். முடி இழப்பை ஊக்குவிக்காது. முடியின் வேர்களுக்கு ஊட்டமளிப்பதன் மூலம் முடி வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

Tags :