Advertisement

அக்குளில் ஏற்படும் கருமையை எளிமையான முறையில் போக்குவது எப்படி ?

By: Karunakaran Fri, 04 Dec 2020 1:27:04 PM

அக்குளில் ஏற்படும் கருமையை எளிமையான முறையில் போக்குவது எப்படி ?

ஆப்பிள் சிடேர் வினிகர், இறந்த செல்களை அகற்றுவதற்கும், வடுக்களை குறைப்பதற்கும் உதவும். அதில் இருக்கும் ஆஸ்ட்ரிஜெண்ட் மூலக்கூறுகள் சரும துளைகளை அகற்றி கருமையை குறைக்க உதவும். பருத்தி பஞ்சுவில் வினிகரை ஊற்றி அக்குள் பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். நன்றாக உலர்ந்ததும் கழுவிவிடலாம். தினமும் ஒருமுறை தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் கருமை நீங்கிவிடும்.

இயற்கையான சன்ஸ்கிரீன் என்று அழைக்கப்படும் கற்றாழை, பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை கொண்டது. கற்றாழையை வெட்டி அதனுள் இருக்கும் கூழை அக்குள் பகுதியில் தடவி, கால் மணி நேரம் உலரவைத்துவிட்டு பின்னர் கழுவிவிடலாம். கடைகளில் வாங்கும் கற்றாழை ஜெல்லையும் பயன்படுத்தலாம். தொடர்ந்து இதனை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

dark circles,armpits,home remedies,skin care ,கருமை வட்டங்கள், அக்குள், வீட்டு வைத்தியம், தோல் பராமரிப்பு

பேக்கிங் சோடா, சரும துளைகளை திறக்கவைத்து கருமையை போக்கச்செய்யும் தன்மை கொண்டது. ஒரு டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், அதே அளவு எலுமிச்சை சாறு கலந்து பசை போல் குழப்பி அக்குள் பகுதியில் தடவ வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவிவிடலாம். வாரத்திற்கு மூன்று, நான்கு முறை செய்து வரலாம். இரண்டு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் அதே அளவு சர்க்கரையை கலந்து அக்குள் பகுதியில் இரண்டு நிமிடங்கள் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் கால் மணி நேரம் கழித்து நீரில் கழுவிவிடலாம்.

வெள்ளரிக்காயின் சாறுவை அக்குள் பகுதியில் இரண்டு நிமிடங்கள் தேய்த்துவிட்டு அது உலர்ந்ததும் தண்ணீரில் கழுவிவிடலாம். தினமும் இவ்வாறு செய்து வந்தால் கருமை குறையத்தொடங்கும் உருளைக்கிழங்கும் சருமத்தை நிறமாற்றம் செய்யும் தன்மை கொண்டது. அதனை தோலுரித்து விழுதாக அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும். அந்த சாறை அக்குளில் தடவி கால் மணி நேரம் கழித்து கழுவி விடலாம். உருளைக்கிழங்கை வெட்டியும் அக்குளில் தடவி வரலாம்.

Tags :