Advertisement

இயற்கை பொருட்களை கொண்டு மருக்களை போக்குவது எப்படி?

By: Monisha Mon, 16 Nov 2020 4:28:14 PM

இயற்கை பொருட்களை கொண்டு மருக்களை போக்குவது எப்படி?

நம்மில் பலருக்கும் கழுத்து, அக்குள், மார்பு, முதுகு, முகம் போன்ற பகுதிகளில் மருக்கள் வருவதுண்டு. இந்த மரு ஒன்று வந்தாலே போதும், எங்கும் பரவும் தன்மை கொண்டது. இந்த மருக்கள் வலி இருப்பதில்லை. ஆனால் அழகையே கெடுத்து விடுகின்றது. அப்படிப்பட்ட அழகை கெடுக்கும் மருவை சில இயற்கை பொருட்களை கொண்டு போக்குவது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஒரு எலுமிச்சையை இரண்டாக வெட்டி, அதில் பாதி எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, அந்த சாறை ஒரு பஞ்சுருண்டையில் முக்கி மரு இருக்கும் இடமெல்லாம் தேய்த்து 30 நிமிடங்கள் அப்படியே ஊற விடுங்கள். இப்படி 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் மருக்கள் காய்ந்து உதிர்ந்து விடும்.

பூண்டை அரைத்து மருக்கள் இருக்கும் இடத்தில் தடவி 20-25 நிமிடங்கள் வரை ஊற விட வேண்டும். அதன் பிறகு கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் 2 முறையாவது செய்து வந்தால் மருக்கள் மறைந்து போகும்.

lemon,garlic,toothpaste,onion,wart ,எலுமிச்சை,பூண்டு,டூத் பேஸ்ட்,வெங்காயம்,மரு

சிறிதளவு டூத் பேஸ்ட் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் மற்றும் சோடா உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின் அதனை படுக்க செல்வதற்கு முன் மரு இருக்குமிடத்தில் நன்றாக தேய்த்து கொள்ளுங்கள். காலையில் எழுந்து கழுவி விடுங்கள். இப்படி தொடர்ந்து 2 வாரம் செய்து வந்தால் மரு முற்றிலும் நீங்கி விடும்.

ஒரு வெங்காயத்தை எடுத்து அதனை நன்கு அரைத்து இரவு படுக்கும் போது தேய்த்து காலை வரை ஊற விட வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் மரு இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

அம்மான் பச்சரிசி பாலை மருக்கள் மீது தடவி வந்தால், மருக்கள் அப்படியே உதிர்ந்து இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

Tags :
|
|
|