Advertisement

சருமத்தை இயற்கை முறையில் பராமரிப்பது எப்படி?

By: Monisha Wed, 16 Dec 2020 2:45:26 PM

சருமத்தை இயற்கை முறையில் பராமரிப்பது எப்படி?

சரும பராமரிப்பு மிக அவசியமான ஒன்றாகும். சருமத்தை சரிவர பராமரிக்கவிட்டால் அழுக்குகள் சேர்ந்து முகத்தில் பருக்கள் போன்ற பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பதிவில் சருமத்தை இயற்கை முறையில் பராமரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

1) ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் தேன்

ஒரு பெளலில் 1/2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் 1 டேபிள் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து விடுங்கள். பிறகு 15-20 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தாலே நீங்கள் பருக்கள் அற்ற முகத்தை பெறலாம்.

2) முட்டையின் வெள்ளை கரு மற்றும் லெமன்

ஒரு பெளலில் 1 டேபிள் ஸ்பூன் அளவுக்கு முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து அதனுடன் 1/2 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து கொள்ளுங்கள். நன்றாக அடித்து கலந்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். ஓரிரு நாட்களில் பருக்களின் வீரியம் குறைந்து மறைந்து விடும்.

apple cedar vinegar,honey,lemon,beauty,skin ,ஆப்பிள் சிடார் வினிகர்,தேன்,லெமன்,அழகு,சருமம்

3) க்ரீன் டீ பேக் மற்றும் தேன்

க்ரீன் டீ பேக் நமது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. தேன் சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை கொடுக்கிறது. க்ரீன் டீ பேக்கை வெட்டி அதிலுள்ள பொடியை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். அதை ஒரு பெளலில் எடுத்து 1-2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

முகத்தை நன்றாகக் கழுவி விட்டு இந்த பேஸ்ட்டை அப்ளே செய்து 5-10 நிமிடங்கள் இருங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

Tags :
|
|
|