Advertisement

இயற்கை முறையில் இறந்த செல்களை நீக்குவது எப்படி?

By: Monisha Sat, 26 Dec 2020 6:00:17 PM

இயற்கை முறையில் இறந்த செல்களை நீக்குவது எப்படி?

வாரம் ஒருமுறையாவது இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கும் முகப்பொலிவிற்கும் மிக நன்மை தரும். நமது சருமத்தின் வகை அறிந்து அதற்கு ஏற்றவாறு இறந்த செல்களை நீக்குவதுதான் சரியான முறை. இந்த பதிவில் இயற்கை முறையில் இறந்த செல்களை நீக்குவது பற்றி தெரிந்துகொள்வோம்.

எளிமையான வழியில் க்ளென்சிங் செய்ய... காய்ச்சாத பால் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்கள், எலுமிச்சை சாறு இரண்டு சொட்டுக்கள், கிளிசரின் 10 சொட்டுக்கள் இதனை ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். இதனை பஞ்சின் மூலம் தொட்டுக்கொண்டு அழுத்தமாக முகத்தை துடைக்கவும்.

ஸ்க்ரப்பிற்கு பழுத்த பப்பாளி பழம், அன்னாசி பழம், ஸ்டராபெர்ரி பழம் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணெய்பசைக்காரர்களுக்கு ஸ்டராபெர்ரி நல்லது. இதனை மிக்சியில் போட்டுக் கூழாக்கவும். தண்ணீர் விட வேண்டாம். அதனுடன் இரண்டு சிட்டிகை பட்டைத்தூள் மற்றும் 1/4 ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

natural,dead cell,cleansing,scrub,blackhead ,இயற்கை,இறந்த செல்,க்ளென்சிங்,ஸ்க்ரப்,கரும்புள்ளி

இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வட்ட வடிவில் தேய்க்கவும். இதனால் இறந்த செல்கள் எளிதாக நீங்கும். முகம் பளபளக்கும். இதனை கைகள் கால்கள் என எல்லா இடத்திலும் தேய்க்கலாம்.

மேலே குறிப்பிட்ட மூன்று பழங்களான பப்பாளி, அன்னாசி மற்றும் ஸ்டராபெரி பழங்கள் இறந்த செல்களை நீக்கும் என்சைம்களை மூலமாகக் கொண்டவை. வாரம் இருமுறை இப்படி ஸ்கரப் செய்வதால் முகப்பொலிவு மேம்படும். கரும்புள்ளிகளும் மறையும்.

Tags :
|