Advertisement

முகம் மற்றும் சருமத்தை அழகாக்க சிவப்பு சந்தனத்தை பயன்படுத்துவது எப்படி?

By: Monisha Tue, 27 Oct 2020 11:39:52 AM

முகம் மற்றும் சருமத்தை அழகாக்க சிவப்பு சந்தனத்தை பயன்படுத்துவது எப்படி?

இயற்கை பொருளான சிவப்பு சந்தனத்தை பயன்படுத்தி முகம் மற்றும் சருமத்தை எப்படி அழகு படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரு டீஸ்பூன் சிவப்பு சந்தனதூளுடன், சிறிது காய்க்காத பால் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் தாண்டி குளிர்ந்த நீரில் முகம் கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்ததால் வெயிலில் கருத்த தோலின் நிறம் பொலிவு பெறும்.

சிலருக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் பசை இருக்கும். இதனை நீக்க 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு சந்தனப் பொடியில், 1 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து முகத்தில் தடவி சிறிது 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இப்படி செய்து வர சருமத் துளைகள் இறுக்கமடைந்து எண்ணெய் பசை நீங்கும்.

சிவப்பு சந்தனத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி வந்தால் சில நாட்களில் வறண்ட சருமம் உடையவர்களுக்கு நல்ல மாற்றம் ஏற்படுவதை காணலாம். அல்லது சிவப்பு சந்தனத்துடன் பால், தேன் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தாலும் நல்ல மாற்றம் கிடைக்கும்.

natural,red sandalwood,face,beauty,skin ,இயற்கை,சிவப்பு சந்தனம்,முகம்,அழகு,சருமம்

4 ஸ்பூன் சிவப்பு சந்தனப் பொடியில் 2 ஸ்பூன் சீமைச்சாமந்தி டீ சேர்த்து கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

சிவப்பு சந்தனம் பவுடர், வேப்பிலை பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி வர பருக்கள் மற்றும் பருவால் ஏற்படும் தழும்புகள், கரும்புள்ளிகளை போக்கும் .

சிவப்பு சந்தன பவுடர், பாதாம் ஆயில், தேங்காய் எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வர சருமத்தை பொலிவாக்கும்.

2 டேபிள் ஸ்பூன் மசித்த பப்பாளியுடன் ஒரு டேபிள் ஸ்பூன் சிவப்பு சந்தனத்தை சேர்த்து முகத்தில் மென்மையாக மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர சருமத்தை புத்துணர்ச்சியுடன் மாற்றும்.

Tags :
|
|