Advertisement

பளிச் பளிச் சருமத்தை பெற உளுந்தை பயன்படுத்துவது எப்படி?

By: Monisha Thu, 15 Oct 2020 4:46:10 PM

பளிச் பளிச் சருமத்தை பெற உளுந்தை பயன்படுத்துவது எப்படி?

உளுந்து உடலுக்கு மட்டுமல்லாமல் சருமத்திற்கும் பலவிதமான நன்மைகளை தருகிறது. தோல் நீக்காத கருப்பு உளுந்து இதற்கு பயன்படுத்துவது அதிக நன்மையை தரும். இதில் ஆன்டி செப்டிக் தன்மை இருப்பதால் முகத்தில் உண்டாகும் முகப்பருக்களை தடுத்து, முகத்தை பொலிவுற செய்யும். முகத்தில் சருமத் துளைகளில் இருக்கும் அழுக்கை வெளியேற்றி சருமத்தை பளிச்சென்று மாற்றும், முகப்பருக்கள் மாறும். மேலும் முகத்தில் உண்டாகும் சுருக்கங்கள் மறையும். முகத்தில் வறட்சி இல்லாமல் தடுக்கும். எண்ணெய்ப்பசை சருமம் உடையவர்களின் பிரச்சனை குறையும். சருமம் மென்மையாக மாறும். பல நன்மைகள் நிறைந்த இந்த உளுந்தினை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
உளுந்து – கால் கப்
பன்னீர் அல்லது கடுகு எண்ணெய் – சிறிதளவு

urad,rose water,skin,tenderness,beauty ,உளுந்து,பன்னீர்,சருமம்,மென்மை,அழகு

செய்முறை
முதலாவது முதல் நாள் இரவே கால் கப் உளுந்தை ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் உளுந்தை நீர் சேர்க்காமல் நன்கு அரைத்து உடனே பயன்படுத்தவும். இல்லையெனில் உளுந்து உப்பி விடும். உளுந்து ஊறவைத்து அரைப்பது கடினமான வேலை என்றால் இலேசாக வாசனை வர வறுத்து மிக்சியில் அடித்து வைத்து கொள்ளுங்கள். இதனை நீங்கள் பயன்படுத்தும் அரைமணி நேரம் முன்பு ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் நீரில் சேர்த்து ஊற வைத்துக்கொள்ளுங்கள்.

அரைத்த இந்த மாவுடன் சிறிதளவு பன்னீர் அல்லது கடுகு எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். அதன்பின் இதனை முகம் மற்றும் கழுத்து பகுதி, கருப்பு படிந்துள்ள அனைத்து பகுதிகளிலும் தடவி மசாஜ் செய்து அவை காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள். காய்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடுங்கள். வாரம் மூன்று நாட்கள் தொடர்ந்து இதை செய்து வர மேல் சொல்லப்பட்ட அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

Tags :
|
|