Advertisement

அழகிய சருமம் பெற... வொயிட் வினிகரை பயன்படுத்துவது எப்படி?

By: Monisha Mon, 21 Dec 2020 2:59:14 PM

அழகிய சருமம் பெற... வொயிட் வினிகரை பயன்படுத்துவது எப்படி?

வீட்டை சுத்தம் செய்ய வொயிட் வினிகர் பயன்படுத்துவது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். வொயிட் வினிகர் வைத்து வீடு மட்டுமல்ல அழகையும் பாரமரிக்கலாம். இதில் உள்ள அஸ்ட்ரிஜெண்ட் என்ற பொருள் நமது சருமத்தில் உள்ள எண்ணிலடங்காத பிரச்சினைகளை சரி செய்கிறது. மேலும் இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் பருக்கள் மற்றும் கருமை கறைகளைக்கு கூட ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது. இந்த பதிவில் வொயிட் வினிகர் எப்படி சரியான வழியில் உங்கள் சருமத்திற்கு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

மிருதுவான சருமம்
1 டீ ஸ்பூன் வொயிட் வினிகர், 1 டீ ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 2 டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடங்கள் உலர வைக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் பட்டு போன்ற மிருதுவான சருமம் கிடைக்கும்.

white vinegar,beauty,skin,rice flour,rose water ,வொயிட் வினிகர்,அழகு,சருமம்,அரிசி மாவு,ரோஸ் வாட்டர்

கருமை திட்டு
2 பழுத்த ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்றாக மசித்து அதனுடன் 1 டீ ஸ்பூன் வொயிட் வினிகர் சேர்த்து கொள்ளவும். இப்பொழுது இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் கருமை திட்டுகள் இல்லாத சருமத்தை பெறலாம்.

சரும துளை அழுக்குகள்
1 டீ ஸ்பூன் வொயிட் வினிகர், 1/2 டீ ஸ்பூன் பென்டோனைட் களிமண் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை அப்படியே முகத்தில் தடவவும். 10 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு க்ளீன்சர் மற்றும் வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் சரும துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் ப்ரஷ்ஷாக இருக்கும்.

Tags :
|
|