Advertisement

முகம், கழுத்தில் உள்ள கருமையை போக்க உதவும் கஸ்தூரி மஞ்சள்

By: Nagaraj Sun, 04 Oct 2020 10:48:26 AM

முகம், கழுத்தில் உள்ள கருமையை போக்க உதவும் கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சள் என்பது இயற்கை நமக்கு அளித்த ஒரு வரப்பிரசாதமாகும். சருமம் எதிர்பார்க்கும் எல்லா முக்கிய தன்மைகளும் கஸ்தூரி மஞ்சளில் உண்டு.

மாசு, சூரிய ஒளி பாதிப்பு, தூசு, அழுக்கு மற்றும் வெப்பம் காரணமாக ஏற்படும் ஒவ்வாமை போன்றவற்றால் உண்டாகும் அழற்சியைப் போக்கி சருமத்தை பாதுகாக்கிறது. கஸ்தூரி மஞ்சள் ஒரு அற்புதமான அன்டி ஆக்சிடென்ட் ஆகும். இதை வைத்து உடலில் முகம், கழுத்து பகுதிகளில் உள்ள கருமையை நீக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:


பால் - 2 ஸ்பூன்
முல்தானிமிட்டி - 2 ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் - 2 ஸ்பூன்

skin,protection,musk yellow,coconut oil,tomato ,சருமம், பாதுகாப்பு, கஸ்தூரி மஞ்சள், தேங்காய் எண்ணெய்,  தக்காளி

மூன்றையும் மிக்ஸ் பண்ணி பேஸ்டாக்கி முகத்தில் அப்ளை பண்ணி 10 நிமிடத்திற்கு பின் கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வாருங்கள். முகம், கழுத்தில் உள்ள கருமை மறைய ஆரம்பிக்கும். கடலை மாவு, முல்தானி முட்டிக்கு ஒரே குணங்கள் உண்டு. உங்கள் சருமத்திற்கு தேவையான புத்துணர்வை தர உதவுவது பால்.

பால் உங்கள் சருமத்தின் உள்ளிருந்து மிருதுவாக்கி, ஒவ்வொரு துளையையும் ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது. காய்ச்சாத குளிர்ந்த பால், கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் முல்தானிமிட்டியுடன் சேர்க்கப்படுவதால், அதன் குளிர்ச்சி சருமத்தில் நீடித்து நிற்க உதவுகிறது. இதனால் சருமம் மிருதுவாகவும் மென்மையாகவும் மாறுகிறது.

இதேபோல் தக்காளி விழுது, மற்றும் பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய்யுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இது சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமத்தை மேன்மையாக்கும்.

தக்காளி ஒரு சிறந்த ப்ளீச். இது ஒரு மென்மையான பொருள். சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமத்தை சேதத்தில் இருந்து மீட்க தக்காளி உதவுகிறது. பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது. மேலும் ஒரு நறுமணத்தை சருமத்திற்கு கொடுக்கிறது.

Tags :
|