Advertisement

குழந்தைகளுக்கு ஏற்படும் சரும வடுக்களை நீக்கும் இயற்கை பொருட்கள்!

By: Monisha Fri, 07 Aug 2020 5:25:03 PM

குழந்தைகளுக்கு ஏற்படும் சரும வடுக்களை நீக்கும் இயற்கை பொருட்கள்!

குழந்தைகளின் முகத்தில் ஏற்படும் சரும வடுக்களை கீழ்க்காணும் பொருட்களைக் கொண்டு சரி செய்யலாம். இந்த சரும அலற்சியை சில இயற்கை பொருட்களைக் கொண்டே விரட்டலாம்.

வாழைப்பழ தோல்
வாழைப்பழ தோல் சரும அழற்சியை போக்க பெரிதும் உதவுகிறது. வாழைப்பழ தோலை ஒரு மணி நேரம் பிரிட்ஜில் வைத்து சரும வடுக்கள் உள்ள இடத்தில் தடவுங்கள். குழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்கி விடும்.

வேப்பிலை
இதில் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள், பூஞ்சை எதிர்ப்பு பொருள், அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ள அற்புத மருந்து. எக்ஸிமா போன்ற சரும அலற்சியை போக்க இது சிறந்த ஒன்று. வேப்பிலைகளை தண்ணீர் விட்டு அரைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட இடத்தில் இதை அப்ளே செய்து வாருங்கள். குழந்தைக்கு நல்ல ரிலீவ் கொடுக்கும்.

children,skin scars,cactus,neem,beauty ,குழந்தைகள்,சரும வடுக்கள்,கற்றாழை,வேப்பிலை,அழகு

கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல் சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதன் ஆன்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் தன்மையால் சரும க்ரீம்களாக கூட பயன்படுகிறது. கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து சரும வடுக்கள் உள்ள பகுதிகளில் அப்ளை செய்யுங்கள். குழந்தைகளுக்குள்ள சரும வடுக்கள் மாயமாய் மறைந்து விடும்.

ஆலிவ் ஆயில்
இது ஒரு இயற்கையான சரும சுத்திகரிப்பு எண்ணெய் என்று சொல்லலாம். காரணம் இது சருமத்தின் மீதுள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதிலுள்ள ஓலியோகேந்தல் சருமத்தில் ஏற்படும் அழற்சியை போக்குகிறது. மேலும் இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் ஈ சரும பாதிப்பை குணப்படுத்துகிறது. எனவே குழந்தைகளின் சருமத்தில் இதை அப்ளே செய்து பலன் பெறலாம்.

வெள்ளரிக்காய்
இதன் அழற்சி எதிர்ப்பு பொருள் குழந்தைகளின் முகத்தில் ஏற்படும் ரேசஸை சரி செய்கிறது. சென்ஸ்டிவ் ஆன சருமத்திற்கு இது சிறந்தது. வெள்ளரிக்காய் மற்றும் ஓட்ஸ் இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை சரும வடுக்கள் பகுதியில் தடவி வந்தால் மறைந்து விடும்.

Tags :
|
|