Advertisement

  • வீடு
  • அழகு குறிப்புகள்
  • அழகை கெடுக்கும் அக்குள் மற்றும் தொடை பகுதிகளை வெள்ளையாக மற்றும் இயற்கை குறிப்புகள்!!

அழகை கெடுக்கும் அக்குள் மற்றும் தொடை பகுதிகளை வெள்ளையாக மற்றும் இயற்கை குறிப்புகள்!!

By: Monisha Fri, 16 Oct 2020 1:23:04 PM

அழகை கெடுக்கும் அக்குள் மற்றும் தொடை பகுதிகளை வெள்ளையாக மற்றும் இயற்கை குறிப்புகள்!!

சிலருக்கு கழுத்து, அக்குள் மற்றும் தொடை பகுதிகள் கறுத்து பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். அதிலும் குறிப்பாக வெள்ளை நிறமாக இருப்பவர்களின் அழகையே கெடுத்து விடும். இதனை எளிமையான முறையில் இயற்கையாக எப்படி போக்குவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்
மஞ்சள் – 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – சிறிதளவு
எலுமிச்சம் பழம் – 1
தக்காளி – 1
அரிசி மாவு – 1 ஸ்பூன்
சர்க்கரை – அரை ஸ்பூன்
காபி பவுடர் – அரை ஸ்பூன்

lemon fruit,tomatoes,rice flour,coffee powder,coconut oil ,எலுமிச்சம் பழம்,தக்காளி,அரிசி மாவு,காபி பவுடர்,தேங்காய் எண்ணெய்

செய்முறை
முதலாவது சிறிதளவு தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். கலக்கிய பின் அதில் எலுமிச்சம் பழம் சாற்றை பிழிந்து விட்டு அதனை நன்கு கலக்குங்கள். இந்த கலவையை எந்த பகுதிகளில் எல்லாம் கருமை நிறம் இருக்கிறதோ அந்த பகுதிகளில் எல்லாம் வட்ட வடிவில் 10 நிமிடங்களுக்கு தடவி கொள்ளுங்கள்.

அதன் பின் ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு எடுத்து அதனுடன் தக்காளியில் பாதி துண்டை எடுத்து அதில் உள்ள சாற்றை பிழிந்து விடுங்கள். அதன்பின் அதில் சர்க்கரை மற்றும் காபி பவுடர் கலந்து நன்கு கலக்கி கொள்ளுங்கள். கலக்கிய இந்த சாற்றை மீதம் இருக்கும் ஒரு துண்டு தக்காளியை எடுத்து அதில் முக்கி ஏற்கனவே மசாஜ் செய்த இடங்களில் பத்து நிமிடங்கள் மசாஜ் செய்து கொள்ளுங்கள். இப்படி செய்து வர கருமை நிறங்கள் மாறி வெள்ளையாக மாறும். இதனை இரண்டு நாள்கள் செய்தாலே நல்ல மாற்றத்தை காண முடியும்.

Tags :