Advertisement

தலைமுடி பிரச்னைக்கு தீர்வு தரும் இயற்கை வழிமுறைகள்!

By: Monisha Fri, 11 Dec 2020 10:14:30 AM

தலைமுடி பிரச்னைக்கு தீர்வு தரும் இயற்கை வழிமுறைகள்!

தலைமுடியை உதிராமல் வளரவும், நரை முடி தோன்றுவதை தடுக்கவும் சில எளிய வழிமுறைகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

முடி உதிராமல் இருக்க... விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணைய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து லேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும்.

முடி வளர... சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால் மீண்டும் முடி வளரும். நேரமில்லை என்பவர்கள் சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊறவைத்து தேய்த்துக்கொள்ளலாம்.

hair,onion,natural,coconut oil,cabbage ,தலைமுடி,வெங்காயம்,இயற்கை,தேங்காய் எண்ணெய்,முட்டைக் கோஸ்

முடி கறுப்பாக வளர... தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்தத் தேங்காய் எண்ணெய்யில் காயவைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களையும் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.

தலை முடியில் உள்ள அழுக்கு நீங்க... தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.

முடி பளபளப்பாக... வெங்காயத்தையும், முட்டைக் கோஸையும் பொடிப் பொடியாக நறுக்கி ஒரு கப் எடுத்து கொள்ளவும். அதை இரவு முழுவதும் ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். காலையில் சிறிது யூடிகோலன் சேர்த்தால் வெங்காய வாசனை போய்விடும். இந்தச் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து மயிர்க் கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்யவும். சீயக்காய்ப் பொடி போட்டுக் குளித்தால் முடி பளபளப்பாக மாறும்.

Tags :
|
|