Advertisement

சருமத்திற்கு அழகு தரும் கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்துவது எப்படி?

By: Monisha Thu, 01 Oct 2020 4:36:50 PM

சருமத்திற்கு அழகு தரும் கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்துவது எப்படி?

பெண்கள் தினமும் சாதாரண மஞ்சளை சருமத்தில் பூசுவதற்கு பதில், கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தலாம். கஸ்தூரி மஞ்சள் சரும அழகை அதிகரிக்கும். கஸ்தூரி மஞ்சளுடன் சில பொருட்களை கலந்து சருமத்திற்கு பயன்படுத்திவதினால் சருமம் என்றும் பொலிவுடன் காணப்படும். இந்த பதிவில் சருமத்திற்கு அழகு தரும் கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்துவது பற்றி தெரிந்துகொள்வோம்.

ஒரு பவுலை எடுத்து எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் மூன்று ஸ்பூன் காய்ச்சாத பால், ஒரு சிட்டிகை அளவு கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையினை சருமத்தில் இப்பொழுது அப்ளை செய்து நன்றாக காயவிடுங்கள், பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பால், கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் தேன் இவை மூன்று சருமத்தில் உள்ள அழுக்கினை நீக்குவதுடன், இயற்கையான முறையில் சருமத்தை என்றும் பளிச்சென்று வைத்து கொள்ளும்.

face,beauty,skin,scrubber,dead cell ,முகம்,அழகு,சருமம்,ஸ்க்ரப்பர்,இறந்த செல்

அடுத்ததாக நாம் சருமத்தில் ஸ்க்ரப்பிங் செய்ய போகிறோம், இதற்கு ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு தேக்கரண்டி வெள்ளை சக்கரை, 1/2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது ஸ்க்ரப்பர் தயாராகிவிட்டது, இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யுங்கள் பின் 5 நிமிடம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள சர்க்கரை சருமத்தில் உள்ள இறந்த செல்களுக்கு புத்துயிர் அளிப்பதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும். தேங்காய் எண்ணெய் மற்றும் கஸ்தூரி மஞ்சள் சருமத்தை மென்மையாகவும், பொலிவுடனும் வைத்து கொள்ளும்.

Tags :
|
|
|