Advertisement

முகம் பொலிவு பெற சில எளிய இயற்கை குறிப்புகள்!

By: Monisha Fri, 23 Oct 2020 10:57:07 AM

முகம் பொலிவு பெற சில எளிய இயற்கை குறிப்புகள்!

முகத்தில் ஏற்படும் முகப்பரு, கருவளையம் ஆகியவை மறைந்து முகம் பொலிவு பெற சில எளிய இயற்கை குறிப்புகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

* முகம் மற்றும் மேனி அழகிற்கு கடலை பருப்பு பாசி பயறு கால் கிலோ,ஆவாரம் பூ காய வைத்தது 100 கிராம், கால் கிலோ மூன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் முகம் அழகு பெறும்.

* தக்காளி சாறு அரை ஸ்பூன், தேன் அரை ஸ்பூன் சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டு வர கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும்

acne,dark circle,face,beauty,honey ,முகப்பரு,கருவளையம்,முகம்,அழகு,தேன்

* முகப்பரு தழும்பு மாற எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், புதினா சாறு 2 ஸ்பூன், பயத்தம் பருப்பு மாவு
இவற்றை கலந்து போட்டால் முகப்பரு தழும்பு மாறும்.

* கடலை மாவுடன் உருளைகிழங்கு சாறு சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தால் முகம் பொலிவு பெறும்.

* 3 கேரட் துண்டு, 3 ஆப்பிள் துண்டு இவற்றை ஜூஸ் செய்து, இந்த ஜூஸ்சில் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கன்னத்தில் சதை போட்டு கன்னத்தின் நிறம் பளபளக்கும்.

Tags :
|
|
|