Advertisement

நகங்களின் அழகை பராமரிக்க உதவும் சில எளிய வழிமுறைகள்!

By: Monisha Thu, 22 Oct 2020 10:46:59 AM

நகங்களின் அழகை பராமரிக்க உதவும் சில எளிய வழிமுறைகள்!

நகங்களின் அழகு நம் அழகை காட்டுவதோடு மட்டுமல்லாமல் நம் ஆரோக்கியதையும் காட்டுகிறது. இந்த பதிவில் நகங்களின் அழகை பராமரிக்க உதவும் சில வழிமுறைகளை குறித்து பார்க்கலாம்.

நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.

நகங்களில் நகசுத்தி, சோற்றுப்புண், நகங்கள் உடைவது போன்றவை தடுக்கப்பட வேண்டுமானால் அதிக நேரம் தண்ணீர் அல்லது டிடர்ஜென்ட் தண்ணீரில் கை, கால்களை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

எலுமிச்சம்பழத் தோலை பயன்படுத்தி நகங்களை சுத்தம் செய்வது நல்லது. பாலைக் கொதிக்க வைத்து இறக்கிப் பதமான சூட்டில் நகங்களில், படுமாறு செய்து சுத்தமான பஞ்சில் துடைக்க நகம் பளபளக்கும்.

nail,beauty,nail polish,milk,olive oil ,நகம்,அழகு,நெயில் பாலீஷ்,பால்,ஆலிவ் எண்ணெய்

கை கழுவும்போது நகத்தில் தண்ணீர்படும். உடனடியாக தண்ணீர் சிறிதளவு கூட இல்லாத வகையில் காய்ந்த டவலால் நகங்களைத் துடைத்துவிட வேண்டும். வலுவிழந்த நகங்கள் உடையாமல் இருக்க நெய்ல் ஹார்டனர் வாங்கி உபயோகப்படுத்துங்கள்.

பாதாம் எண்ணெய்யை நகங்களுக்கு பூசி அரைமணி நேரம் வைத்திருந்து கடலைமாவினால் கழுவி சுத்தம் செய்தால் நகங்கள் மினுமினுக்கும்.

ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊற வைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும். வாரம் ஒருமுறை நகங்களை வெட்டி சுத்தம் செய்யுங்கள். மேலும் நகங்களில் இருக்கும் அழுக்குகளை நீக்க தவறாதீர்கள்.

nail,beauty,nail polish,milk,olive oil ,நகம்,அழகு,நெயில் பாலீஷ்,பால்,ஆலிவ் எண்ணெய்

கால் நகங்களை யூ வடிவில் வெட்டுவதை தவிர்த்து விட்டு நேராக வெட்டி விட வேண்டும். இப்படி செய்வதினால் கால் நகங்களை எளிமையாக சுத்தம் செய்யலாம், எளிதில் அழுக்கு அடைவதையும் தவிர்க்கலாம்.

நகங்கள் பளபளப்புடன் மஞ்சள் நிறமாக மாறாமல் இருப்பதற்கு வாரத்தில் இரண்டு நாளாவது நெய்ல் பாலிஷ் போடாமல் இருங்கள். மாதம் ஒருமுறை கைகளுக்கு மெனிக்குயர் , கால்களுக்கு பெடிக்குயர் போன்ற பேக்குகளை உபயோகப்படுத்துங்கள். இது உங்கள் நகங்களை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவும்.

நகங்கள் எளிதில் உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களைச் சாப்பிட வேண்டும்.

Tags :
|
|
|