Advertisement

இயற்கை முறையில் முகத்தில் இருக்கும் முடியை போக்க எளிய டிப்ஸ்!

By: Monisha Mon, 19 Oct 2020 3:33:54 PM

இயற்கை முறையில் முகத்தில் இருக்கும் முடியை போக்க எளிய டிப்ஸ்!

முகத்தில் முடி வளருவதை எல்லா பெண்களும் விரும்புவதில்லை. சில பெண்கள் இதை சேவிங் செய்து எடுகின்றனர். சிலர் அழகு நிலையங்களுக்கு சென்று இதை கிளீன் செய்கின்றனர். ஆனால் இதை இயற்கை முறையிலேயே போக்க பல வழிமுறைகள் உள்ளன. இந்த பதிவில் இயற்கை முறையில் முகத்தில் இருக்கும் முடியை போக்க உதவும் வழிமுறைகளைப் பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை ஜூஸ் செய்து அதில் கொஞ்சம் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பின் இவற்றை கடலை மாவுடன் கலந்து முகத்தில் தேய்த்து விடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிவிடுங்கள். முகத்திலிருந்து முடி தானாக உதிர்வதை பார்க்க முடியும்.

எலுமிச்சை
இரண்டு ஸ்பூன் எலுமிச்சை மற்றும் சர்க்கரை எடுத்துக்கொண்டு அதில் சிறிது தண்ணீர் கலந்து அடுப்பில் வைத்து விடுங்கள். நீர் கொதித்து வரத் தொடங்கும்போது அடுப்பை அனைத்துவிடுங்கள். பின் சூடு குறைந்ததும் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். முடி உதிர்வதை நீங்களே உணர்வீர்கள்.

nature,beauty,face,women,sugar ,இயற்கை,அழகு,முகம்,பெண்கள்,சர்க்கரை

வாழைப்பழம்
ஒரு வாழைப்பழமும் மையாக அரைத்த ஓட்ஸ் இரண்டு ஸ்பூனும் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் தேன் கலந்து மூன்றையும் பேஸ்ட் போல் கலந்துகொள்ளுங்கள். அதை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது உங்கள் முகத்தில் இருக்கும் முடியை நீக்குவது மட்டுமல்ல முகத்திற்கு பொலிவான தோற்றத்தை உருவாக்கும்.

முட்டை
ஒரு ஸ்பூன் முட்டையில் உள்ள வெள்ளைக்கரு, சோள மாவு, சர்க்கரை மூன்றையும் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த மிக்ஸ் செய்த கலவையை முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் காய விடுங்கள். 15நிமிடம் கழித்து இது தானாக முகத்திலிருந்து உதிர்ந்து விழும். அப்போது முற்றிலும் நீக்கிவிட்டு முகத்தைக் கழுவிவிடுங்கள். இதை வாரம் மூன்று முறை செய்து வந்தால் முடி தானாக உதிரும்.

Tags :
|
|
|
|