Advertisement

கோடைக்காலத்தில் முகத்தை பராமரிக்க எளிய வழிமுறைகள்

By: Nagaraj Thu, 24 Dec 2020 10:28:05 PM

கோடைக்காலத்தில் முகத்தை பராமரிக்க எளிய வழிமுறைகள்

கோடை காலத்தில் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க எளிய வழி என்ன என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள்.

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் பருக்கள், சருமத்தில் நிறம் மாறுதல், வடுக்கள் ,தேமல் போன்ற பிரச்சனைகள் வருகிறது. கோடை காலத்தில் வியர்வை அதிகமாக சுரப்பதால் சூட்டு கொப்பளம் சிறு சிறு கட்டிகள் போன்றவை படையெடுக்கும.

உரிய முறையில் பராமரித்தால் சருமத்தின் அழகு குறையாமல் பாதுகாக்கலாம். கோடை காலங்களில் பழங்கள் நீர் சத்து மிகுந்த காய்கறிகள் சாப்பிடுவதால் முக அழகு கூடும். அதேநேரம் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சுரைசர் வெயிலில் செல்லும்போது சன் ஸ்கிரீன் க்ரீம்கள் பவுண்டேஷன் என்ற சாதாரண ஃபேஸ் மேக்கப் செய்வதையும் கட்டாயமாக்கி வைத்திருக்கிறோம். இதனால் முகத்தில் சருமப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

முறையான பராமரிப்பு இருந்தால் இதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். நமது முகத்தில் செல்கள் தோன்றுவதும் அழிவதும் ஆக இருக்கும். சுழற்சி முறையில் இருக்கும் போது சருமத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது குறைவாகவே இருக்கும்.

scrub,banana,tomato,papaya,apple,sugar ,ஸ்க்ரப், வாழை, தக்காளி, பப்பாளி, ஆப்பிள், சர்க்கரை

இறந்த செல்கள் வெளியேறி சருமத் துவாரங்களில் இருப்பதன் மூலம் பருக்கள் உருவாகின்றன. இதனால் சருமத்தில் பொலிவிழந்து போகிறது.

இதனை சரிசெய்ய வீட்டிலிருந்தபடியே இரண்டு ஸ்பூன் பசும்பாலுடன் அரை ஸ்பூன் கிளிசரின் கலந்து பஞ்சில் தொட்டு முகத்தில அனைத்து இடங்களிலும் தடவ வேண்டும். இப்படி கிளின்செய்தவுடன் பிறகு ஸ்க்ரப் பண்ண வேண்டும்.

வாழை தக்காளி பப்பாளி ஆப்பிள் போன்ற பழங்கள் ஏதேனும் ஒன்றுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து முகத்தை அழுத்திமசாஜ் செய்யவும். இறந்தசெல்கள் அவ்வப்போது வெளியேறுவதால் முகத்தில் ஜொலிப்பு கூடும்.

Tags :
|
|
|
|
|