Advertisement

உங்கள் முக அழகை அதிகரிக்க சில எளிய குறிப்புகள்!!

By: Monisha Sat, 08 Aug 2020 2:38:48 PM

உங்கள் முக அழகை அதிகரிக்க சில எளிய குறிப்புகள்!!

ஆப்பிள் பழத்தை தோல் நீக்கி அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி நன்கு ஊறிய பிறகு குளித்தால் முகச் சுருக்கம், பருக்கள் போன்றவை ஏற்படாது. மேலும் முகம் பொலிவு பெறும்.

பெண்களுக்கு உதட்டின் மேல் மற்றும் கீழ் தாடைகளில் வளரும் முடிகளை அகற்ற சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பை நீரில் கலந்து முடிகளின் மேல் மெதுவாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடி நாளடைவில் உதிர்ந்துவிடும். மேலும் அந்த இடத்தில் முடி முளைக்காது.

முகத்தில் உள்ள துவாரங்களை போக்க ஒரு குச்சியில் பஞ்சை சுற்றி அதை எலுமிச்சை சாறில் நனைத்து துவாரங்கள் இருக்கும் இடத்தில் தடவினால் துவாரங்கள் அடைபட்டு விடும்.

பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் எலுமிச்சை சாறில் சிறிதளவு உப்பு கலந்து தலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.

நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின் மீது தடவினால் பரு குணமாகும்.

face,beauty,apple,salt,tomato ,முகம்,அழகு,ஆப்பிள்,உப்பு,தக்காளி

திராட்சைப் பழத்தை சிறிதளவு எடுத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

தக்காளியை முகத்தில் நன்கு தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும்.

புதினா, கொத்தமல்லி அல்லது கருவேப்பிலை இவற்றுள் ஏதாவது ஒன்றை துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் சோம்பல் ஏற்படாமல் இருக்கும்.

பிழிந்த எலுமிச்சம் பழத்தோலை மோர் அல்லது தயிருடன் சேர்த்து முகத்தில் நன்கு தேய்த்துக் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

காலில் உள்ள நகங்களை உப்பு கலந்த நீரில் பாத்து நிமிடம் ஊறவைத்து பிறகு பழைய பிரஷ்ஷினால் தேய்த்தால் நகங்கள் சுத்தமாகும். மேலும் கிருமிகள் அழிந்து விடும்.

Tags :
|
|
|
|