Advertisement

வறட்சியான சருமம் கொண்டவர்களின் முகம் பொலிவடைய சில டிப்ஸ்

By: Nagaraj Sun, 01 Nov 2020 4:05:25 PM

வறட்சியான சருமம் கொண்டவர்களின் முகம் பொலிவடைய சில டிப்ஸ்

வறட்சியான சருமம் கொண்டவர்களின் முகம் மிகவும் கறுத்து களையிழந்து காணப்படும். இதற்கு காரணம் இவர்களின் உணவு முறையே. வறட்சியான சருமம் கொண்டவர்களுக்கு மலச்சிக்கல் இருக்கும். இவர்கள் உணவில் அதிகம் புளி தக்காளி போன்ற புளிப்புச் சுவையை விரும்பி சாப்பிடுபவர்களாக இருப்பார்கள்.

வறட்சியான சருமம் கொண்டவர்களின் முகம் பளபளக்க சில வழிமுறைகள்:

தேவையானவை:
வெண்டைக்காய் பிஞ்சு - 2
கேரட் - 1

இவற்றை எடுத்து நறுக்கி தேங்காய் பால் விட்டு அரைத்து முகம் மற்றும் உடல் எங்கும் பூசி சிறிது நேரம் ஊறவைத்து குளித்து வந்தால் வறண்ட சருமம் பொலிவடையும்.

dry skin,sour taste,almonds,cashews ,வறட்சி சருமம், புளிப்பு சுவை, பாதாம், முந்திரி

செம்பருத்தி இலை பயத்தம் பயறு இவற்றை சம அளவாக எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் பூசிவந்தால் முகம் பளபளக்கும். அகத்திக் கீரையை தேங்காய் பால் விட்டு அரைத்து முகம் மற்றும் உடல் முழுவதும் பூசி ஊறவைத்து குளித்து வந்தால் வறண்ட சருமம் பொலிவடையும்.

வறட்சியான சருமம் கொண்டவர்கள் புளிப்பு சுவை கொண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. மேலும் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சருமத்தை வறட்சியுறச் செய்யும் குளியல் சோப்புகளைத் தவிர்ப்பது நல்லது. பாதாம், முந்திரி, வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளை உணவில் மிதமான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

Tags :