Advertisement

பிளாக்ஹெட்ஸை போக்கி சருமத்தை மென்மையாக்க சில குறிப்புகள்!

By: Monisha Wed, 23 Dec 2020 09:43:10 AM

பிளாக்ஹெட்ஸை போக்கி சருமத்தை மென்மையாக்க சில குறிப்புகள்!

பிளாக்ஹெட்ஸ் மற்றும் தோல் பிரச்சனைகளை எளிதான வீட்டு வைத்தியங்கள் மூலம் விரட்டலாம். இந்தப்பதிவில் சில வீட்டு வைத்திய குறிப்புகளை பார்ப்போம்.

ரோஸ் வாட்டருடன் கடலை மாவைப் பயன்படுத்தி தோலில் மசாஜ் செய்யவும். இது ஒரு சில நிமிடங்கள் இருக்கட்டும், பின்னர் கழுவலாம். ஒரு காட்டன் துண்டு எடுத்து கொள்ளுங்கள். இதை மந்தமான நீரில் நனைத்து சருமத்திற்கு ஒரு நிமிடம் தடவவும். இது சருமத்தை மென்மையாக்கும் மற்றும் பிளாக்ஹெட்ஸ் எளிதில் வெளியே வரும்.

இலவங்கப்பட்டையில் அதிகளவு ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளது. மேலும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. 2 தேக்கரண்டி பட்டை பொடி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் சிறிது தண்ணீர் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் அப்ளை செய்யுங்கள். பிறகு 15 நிமிடங்கள் கழித்து கழுவும். இதை தினசரி செய்யவும்.

blackheads,skin problem,skin,tenderness,beauty ,பிளாக்ஹெட்ஸ்,தோல் பிரச்சனை,சருமம்,மென்மை,அழகு

சர்க்கரை ஒரு அருமையான ஸ்கிரப். தேன் அழுக்கை அகற்றி தோலுக்கு ஈரப்பதத்தை தருகிறது. மூன்று தேக்கரண்டி சர்க்கரையுடன் ஒரு தேக்கரண்டி தேனை சேர்க்கவும். அதை மெதுவாக மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும்.

முட்டையின் வெள்ளைக் கரு தோலை இறுக்கமாக்கும். அதோடு சருமத்தில் உள்ள அழுக்கை நீக்க உதவும். முகத்திற்கு இது ஒரு சிறந்த ஃபேஸ் பேக். ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்கு அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள். பிறகு சுத்தமாக கழுவினால் பிளாக் ஹெட்ஸ் மறைந்து சருமம் பளபளக்கும்.

தயிர், ஓட்ஸ், எலுமிச்சை சாற்றின் சில துளிகள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து தோலில் ஒரு நிமிடம் வைக்கவும். இது ஐந்து நிமிடங்கள் இருக்கட்டும், பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.

Tags :
|