Advertisement

முகம் வறட்சியை இயற்கை முறையில் போக்க..!

By: Monisha Thu, 05 Nov 2020 4:25:29 PM

முகம் வறட்சியை இயற்கை முறையில் போக்க..!

வறண்ட சருமம் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். வறண்ட சருமம் கொண்டவர்கள் பலவிதமான கீரிம்களை பயன்படுத்துவார்கள். ஆனால அவற்றால் நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை. இந்த பதிவில் நாம் முகம் வறட்சியை இயற்கை முறையில் போக்கி சரும செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் இயற்கை வழிமுறையை பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்
வெள்ளரிக்காய்
கேரட்
வெண்ணெய்

dry skin,face,cucumber,carrot,butter ,வறண்ட சருமம்,முகம்,வெள்ளரிக்காய்,கேரட்,வெண்ணெய்

எப்படி தயாரிப்பது ?
முதலாவது வெள்ளரிக்காயை தோல் எடுத்து நன்கு அரைக்கவும். அதன் பின் கேரட்டை தோல் நீக்கி சாறு எடுக்கவும். அதன் பின் அரைத்து வைத்திருக்கும் வெள்ளரிக்காய் மற்றும் கேரட் சாற்றை வெண்ணெய் கலந்து நன்றாக கலக்கவும்.

இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். அதன்பின் 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். இந்த பேக்கை வாரத்தில் இரண்டு நாள்களாவது போட்டு வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

Tags :
|
|