Advertisement

முகத்தில் உள்ள நீங்காத அழுக்குகளை நீக்க..!

By: Monisha Mon, 26 Oct 2020 10:19:53 AM

முகத்தில் உள்ள நீங்காத அழுக்குகளை நீக்க..!

முக அழகை அதிகரிக்க பெண்கள் அதிகளவு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். முகம் அழகு பெற நாம் முக்கியமாக செய்ய வேண்டியது முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவது தான். முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கினாலே முகம் பரகாசமடையும். இந்த பதிவில் நாம் முகத்தில் உள்ள நீங்காத அழுக்குகளை போக்க உதவும் சில இயற்கை வழி முறைகளை தெரிந்துகொள்ளவோம்!

எலுமிச்சை ப்ளீச்சிங் தன்மை கொண்டது. இந்த எலுமிச்சை சாற்றினை தூங்க செல்லும் முன் நீருடன் கலந்து முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் 3 முறை செய்து வந்தால் முகம் அழுக்கு நீங்கி பொலிவு பெரும்.

face,beauty,lemon,tomato,yogurt ,முகம்,அழகு,எலுமிச்சை,தக்காளி,தயிர்

இதேபோல் தக்காளி சாற்றினை எடுத்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தக்காளி ப்ளீச்சிங் தன்மை கொண்டது. ஆகவே தொடர்ந்து இதை செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பளபளப்பாகும்

தயிரை முகத்தில் தடவி 25 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ விடும். 2 வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தின் நிறம் அதிகரிக்கும்.

Tags :
|
|
|
|