Advertisement

மென்மையான முக சருமம் பெற இதை ட்ரை பண்ணுங்க!!

By: Monisha Thu, 19 Nov 2020 1:56:52 PM

மென்மையான முக சருமம் பெற இதை ட்ரை பண்ணுங்க!!

பெண்களின் முக சருமம் மிகவும் மிருதுவாக காணப்படும். எனவே முகத்தில் கெமிக்கல் நிறைந்த பொருள்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. நம் வீட்டில் உள்ள சமையல் அறையிலேயே முகத்துக்கு அழகு சேர்க்க தேவையான பொருள்கள் உள்ளது.

முதலில் ஒரு கிண்ணத்தில் நம் முகத்துக்கு தேவையான காபி தூளை எடுத்து கொள்ள வேண்டும். அதில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறை பிழிந்து கொண்டு இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும். கலந்த கலவையை முகத்தில் போட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும்.பின்பு மிதமான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் முகம் பொலிவு அடையும்.

tenderness,women,face,beauty,nature ,மென்மை,பெண்கள்,முகம்,அழகு,இயற்கை

தக்காளியை வட்ட வடிவில் நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு தட்டில் தேவையான அளவு சர்க்கரையை எடுத்து தக்காளியை தொட்டு முகத்தில் மென்மையாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் ஆகியவை மாயமாய் மறைந்து விடும்.

ஒரு பௌலில் தேவையான அளவு ஓட்ஸ் எடுத்து அதனுடன் பச்ச பாலை சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகம் பொலிவும், மென்மையும் அடையும். இது போல இயற்கையான முறையில் முகத்தை கவனித்து வந்தால் பருக்கள் ஆகியவை நெருங்கவே நெருங்காது. சருமமும் பாதிப்படையாமல் இருக்கும்.

Tags :
|
|
|