Advertisement

தலைக்கு தேய்க்கும் எண்ணெய்யை இப்படி பயன்படுத்துங்கள்!!

By: Monisha Wed, 28 Oct 2020 3:44:06 PM

தலைக்கு தேய்க்கும் எண்ணெய்யை இப்படி பயன்படுத்துங்கள்!!

பெண்களுக்கு தலைக்கு உபயோகப்படுத்தும் எண்ணெய் முதல் குளிக்கும் முறை வரை பல சந்தேகங்கள் இருக்கும். அந்தவகையில் அனைத்து வகையான சந்தேகங்களையும் நிவிர்த்தி செய்ய இந்த பதிவு உங்களுக்கு உதவலாம்.

தலைக்கு உபயோகப்படுத்தும் எந்த எண்ணையாக இருந்தாலும் தொடர்ச்சியாக எடுத்து வரவேண்டும்.
ஒரு எண்ணெய் உங்கள் தலைமுடிக்கு ஏற்றதாக இருந்தால் தொடர்ந்து அந்த எண்ணையை தேய்த்து வர வேண்டும். வெளியூர் பயணம் செய்வதாக இருந்தால் கூடவே தொடர்ந்து உபயோகப்படுத்தும் எண்ணையையும் எடுத்து செல்லுங்கள்.

தலை முடிக்கு எண்ணெய் தேய்க்கும் பொழுது ஏனோதானோவென எண்ணெய் தேய்க்க கூடாது. அவசரமில்லாமல் மனஅமைதியோடு எண்ணெய் தேய்க்க வேண்டும். எண்ணெய் மயிர்க்கால்களில் நன்றாக படும்படி சிறிது அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வது போல் தேய்க்க வேண்டும். சிலர் உச்சந்தலையில் மட்டும் எண்ணெய் தேய்ப்பார்கள். அப்படி தேய்த்தால் நீங்கள் தேய்க்கும் எண்ணையின் முழு பயனும் முடிக்கு கிடைக்காது. தலைமுடி முழுவதுமாக மயிர்க்காலால் வரை ஒரே சீராக ஆயில் படவேண்டும்.

women,hair,beauty,oil,massage ,பெண்கள்,தலை முடி,அழகு,எண்ணெய்,மசாஜ்

சில ஹேர் ஆயில் வகைகள் சில நேரங்களில் தலைவலி மற்றும் ஜலதோஷத்தை ஏற்படுத்தும் அப்படி ஏற்பட்டால் சில நாள்கள் விட்டு மறுபடியும் தேய்த்து பாருங்கள். இப்படி இரண்டு மூன்று முறை செய்து தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டால் அந்த எண்ணையை மாற்றிவிடுங்கள். அதுமட்டுமல்லாமல் வேறு ஏதாவது பிரச்சனைகள் உடலில் இருக்கலாம். மருத்துவரை கலந்தாலோசிப்பது நலம்.

சிலருக்கு எந்த எண்ணையை பயன்படுத்தினாலும் தொடர்ந்து முடி கொட்டி கொண்டே இருக்கும். பலவகையான எண்ணெய்களை மாற்றி தேய்த்து பார்ப்பார்கள் ஆனால் பிரயோஜனம் இருக்காது. அப்படி பட்டவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உடலில் இருக்கும் வேறுபல நோய்கள் காரணமாகவும் அதிக முடி உதிர்தல் ஏற்படலாம்.

சிலர் ஷாம்புவை அடிக்கடி மாற்றுவார்கள். அப்படி தொடர்ந்து ஷாம்புவை மாற்றினாலும் முடி உதிர ஆரம்பிக்கும். அதுபோல் முடி உதிர ஆரம்பித்தால் கடைகளில் கிடைக்கும் ஷாம்புக்களை தவிர்த்து உங்கள் வீட்டிலேயே ஷாம்பு தயாரித்து பயன்படுத்தலாம்.

women,hair,beauty,oil,massage ,பெண்கள்,தலை முடி,அழகு,எண்ணெய்,மசாஜ்

அலுவலகம் செல்லும் பெண்கள் தலைக்கு குளித்துவிட்டு ஈரம் காயாமல் கூந்தலை முடித்துவிட்டு செல்வார்கள். இதனால் முடியின் ஈரம் காயாமல் முடி அதன் சக்தியை இழந்து விரைவில் முடி உதிர ஆரம்பிக்கும். குளித்து முடித்து விட்டு கூந்தலை சரியாக காய வைக்க வேண்டும். அதுபோல் இரவு தலைக்கு குளிக்கும் பெண்கள் தலைமுடி ஈரம் காயாமல் படுக்கைக்கு செல்ல கூடாது. தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் குளித்து முடித்துவிட வேண்டும். ஈர தலையோடு படுக்க சென்றால் உங்கள் முடி சேதமடைவதோடு மட்டுமல்லாமல் அடிக்கடி ஜலதோஷம் ஏற்படும்.

தலைக்கு எண்ணெய் தேய்த்தால் குறைந்தது 1/2 மணி நேரம் கழித்து குளிப்பது நலம். அடுத்து தலைக்கு எண்ணெய் தேய்த்து விட்டு குளிக்காமல் வெயிலில் செல்ல கூடாது. ஏனென்றால் வெயிலில் செல்லும் பொழுது தலையில் வியர்வை ஏற்பட்டால் அது விரைவில் ஜலதோசத்திற்கு வழிவகுக்கும். மேலும் சிலருக்கு தலைவலியை உண்டுபண்ணும். அதுவே நீங்கள் குளித்து விட்டு சென்றுவிட்டால் எந்த பிரச்னையும் இல்லை.

சிலர் கேட்பார்கள் எந்த வயது வரை முடி வளரும் என்று முடி வளர வயது ஒரு தடையில்லை. நீங்கள் உண்ணும் உணவு, தண்ணீர், சுற்றுசூழல், உடற்பயிற்சி, உடல்நிலை, ஆரோக்கியம், தூக்கம்,மனஅழுத்தம் இவைகளை பொறுத்தே அமையும். உங்கள் உடலை நீங்கள் நன்றாக பேணினால் 100 வயதாக இருந்தாலும் முடி உதிராமல் நன்றாக இருக்கும்.

Tags :
|
|
|
|