Advertisement

முகம் மின்ன வேண்டுமா... காபி தூள் ஸ்கர்ப் செய்யுங்கள்!!!

By: Nagaraj Fri, 15 May 2020 11:27:26 AM

முகம் மின்ன வேண்டுமா... காபி தூள் ஸ்கர்ப் செய்யுங்கள்!!!

உங்கள் முக அழகை காபி தூள் கூட பளபளக்க வைக்கும் என்பது தெரியுங்களா? என்னது காபி தூள் வைத்து முகத்தை பளிச்சிட செய்யலாமா என்று வியக்காதீர்கள். காபி இல்லாமல் அன்றைய நாளே இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால் நாம் அனைவரும் காபியை குடித்த பின் தான் மற்ற வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறோம்.

சிலருக்கு காபி குடிக்கவில்லை என்றால் தலை வலியே வந்துவிடும். அந்தளவிற்கு நம் வாழ்வோடு பின்னி பிணைந்துள்ளது காபி. இந்த காபி தூள்தான் முகத்தின் அழகை மேம்படுத்துகிறது.


facial glow,coffee,scrub,skin,twice ,முகம் பளிச்சிடும், காபி, ஸ்க்ரப், சருமம், இருமுறை

இந்த காபி நமக்கு புத்துணர்ச்சியூட்டும் பானமாக மட்டுமில்லாமல் நம் முகத்தை அழகூட்டவும் பயன்படுகிறது. காபி தூளை வைத்து முகத்தை அழகாக்க சில டிப்ஸ் உங்களுக்காக.
தேவையானவை

காபி தூள் - ஒரு கப்,
ஏலக்காய் பொடி - 2 ஸ்பூன் ,
தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன்
சர்க்கரை-1 கப்

facial glow,coffee,scrub,skin,twice ,முகம் பளிச்சிடும், காபி, ஸ்க்ரப், சருமம், இருமுறை

இதை அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகம் மட்டுமல்லாது கை கால்களிலும் தேய்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் மிதமான நீரில் குளிக்கவும். இதை வாரத்திற்கு இருமுறையாவது தொடர்ந்து செய்து பாருங்கள் உங்கள் முகம் மட்டுமின்றி சருமமும் மின்னும்.

இதேபோல் ஒரு கப் காபி பொடியில் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் ஸ்க்ரப் போல் 10 நிமிடங்களுக்கு தேய்த்து விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இப்படி வாரம் ஒரு முறை செய்து பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு உங்கள் முகம் பளிச்சிடும்.

Tags :
|
|
|